மொத்தமா மாத்தீட்டோமுலு! | telugu cinema review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)

மொத்தமா மாத்தீட்டோமுலு!

மிழ் போலவே, தெலுங்கு சினிமாவுக்கும் 2018 ஸ்பெஷலோ ஸ்பெஷல். தமிழ்சினிமாவின் புதிய தலைமுறை இயக்குநர்கள் பரியேறும் பெருமாள், 96, மேற்குத் தொடர்ச்சி மலை, ராட்சசன், கனா என ஆட்டம் மாற்றினார்களோ, அப்படி ஆந்திராவிலும் கடந்த ஆண்டில் நிறைய நிறைய மாற்றங்கள். தோசை ஆர்டர் பண்ணவும்கூடத் தொடைதட்டுகிற வெத்து ஹீரோயிசமும் அரிவாள் வில்லன்களின் அலப்பறைகளும் லாஜிக் இல்லாத திரைக்கதைகளும் என இருந்த தெலுங்கு சினிமா, வித்தியாச ஜானர்கள், விதவிதமான கதைகள் என மாற்றிக் காட்டியது சென்ற ஆண்டு. எங்களுக்கு மாஸும் வரும் கிளாஸும் வரும் என கெத்து காட்டி மலைக்கவைத்தார்கள்.