வலைபாயுதே | Social Media Hot Shares - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)

வலைபாயுதே

facebook.com/pu.ko.saravanan

உடைந்துபோயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். தனிமையை நாடி எங்கோ வெறித்துப் பார்க்கும் விழிகளோடு, நினைவுகளிலும், படபடப்பிலும் அவள் தொலைந்திருப்பாள். எல்லாக் குழப்பங் களையும் தலைக்குள் ஏற்றிக்கொள்ள முடியாமல், இதயத்தின் துயரங்களை எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாமல், “நான் நல்லாத்தான் இருக்கேன்.” என்பாள். அவள் போராட்டக்குணத்தை இழந்து விடவில்லை, பயனற்ற ஒன்றுக்குப் போராடுவதையே அவள் நிறுத்தி விட்டாள்.