உலகத் தெருக்கடை உணவுகள் | World Street Food Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

உலகத் தெருக்கடை உணவுகள்

தெருவோரக் கடைகளிலும் தள்ளுவண்டி உணவகங்களிலும் சாப்பிடுகிறவர்கள் நட்சத்திர ரெஸ்டாரன்ட்டுகளை அண்ணாந்துப் பார்த்தது அந்தக் காலம். இப்போது நட்சத்திர ஹோட்டல்களில் ‘ஸ்ட்ரீட் ஃபுட்’ வகைகளைக் கொண்டாடுகிறார்கள். தெருக்கடை உணவுத் திருவிழா, தட்டுக்கடை ஃபெஸ்டிவல் என்றெல்லாம் விழாக்கோலம் ஆக்குகிறார்கள். அங்கு பரிமாறப்படுவது என்னவோ, நம் தெருக்கடை உணவுகள்தாம். உணவுத் திருவிழாக்களோடு முடிந்துவிடவில்லை இதன் மீதான மோகம்.