நெல், சாமை, நிலக்கடலை, ஆமணக்கு.... பல்கலைக்கழகத்தின் புதிய ரகங்கள்! | TNAU Agritech Portal Releases new Varieties of crops - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

நெல், சாமை, நிலக்கடலை, ஆமணக்கு.... பல்கலைக்கழகத்தின் புதிய ரகங்கள்!

புதிய ரகங்கள்

வ்வோர் ஆண்டும் பொங்கல் விழா சமயத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பாகப் புதிய பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து 14 புதிய பயிர் ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அவை குறித்த விவரங்கள் இங்கே...

நெல்

ஏ.டி.டீ-53: இது குறுவை, நவரை, கோடை ஆகிய பருவங்களுக்கு உகந்தது. 105 நாள்கள் வயது கொண்டது. ஒரு ஹெக்டேருக்குச் சராசரியாக 6,340 கிலோ மகசூல் கிடைக்கும். நடுத்தரச் சன்ன அரிசி. அதிக அரவைத் திறன் கொண்டது. குலைநோய், இலை உறை அழுகல், தண்டுத்துளைப்பான், இலை மடக்குப் புழு ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.

[X] Close

.

[X] Close