வீட்டுக்குள் ஏ.சி... மாடித்தோட்டத்தின் மகிமை! | Organic Terrace garden by a young lady in Chennai - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

வீட்டுக்குள் ஏ.சி... மாடித்தோட்டத்தின் மகிமை!

மாடித்தோட்டம்

“சென்னையில் மாடித்தோட்டத்துல ஆர்வம் உள்ளவங்களா இணைஞ்சு நடத்துற ‘ஆர்கானிக் கார்டன் ஃபவுண்டேஷன் குழு’வில் உறுப்பினரா இருக்கேன். ‘பசுமை விகடன்’ புத்தகத்துல மாடித்தோட்டம் பத்தி வர்ற செய்திகளை எல்லாம் எங்க குழுவுக்கான வாட்ஸ்அப்ல பதிவாங்க.  இந்தப் பதிவுகளையும், ஆர்கானிக் கார்டன் ஃபவுண்டேஷன் குழுவினருடைய ஆலோசனைகளையும் வெச்சுதான் வெற்றிகரமா மாடித்தோட்டம் அமைச்சுப் பராமரிச்சுட்டு இருக்கேன்” என்று சந்தோஷமாகச் சொல்கிறார், சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ரஜிதா மோகன்.

“சின்ன வயசுல வீட்டுல நிறையச் செடிகளை வளர்த்துட்டுருந்தோம். தினமும் அதுக்குத் தண்ணி ஊத்தி நான்தான் கவனிச்சுக்குவேன். ஒரு கட்டத்துல செடிகளைப் பராமரிக்க முடியாம எல்லாத்தையும் அழிச்சுட்டாங்க. அப்போ இருந்தே எனக்குச் செடி வளர்ப்புல ஆசை அதிகம். திருமணம் ஆன பிறகு, கொஞ்சம் செடிகளை அங்கங்க வெச்சுப் பராமரிச்சுட்டுருந்தேன். இப்போ ஒரு வருஷமாகத்தான் செடி வளர்ப்புல தீவிரமா இறங்கி மாடித்தோட்டம் அமைச்சுருக்கேன்” என்று சொன்ன ரஜிதா மோகன், மாடித்தோட்டச் செடிகளைச் சுற்றிக்காட்டிய படியே பேச ஆரம்பித்தார்.

[X] Close

.

[X] Close