மரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு! | Marathadi manadu - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

மரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

விதைப்பதற்காக எடுத்து வைத்திருந்த நிலக்கடலையைக் காயவைத்து, எடுத்து மூட்டை கட்டிக் கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. சற்று நேரத்தில் ‘காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர அன்றைய மாநாடு கூடியது.

வழக்கம்போல ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், வாத்தியார். “இலவச மின்சாரம் உள்ளிட்ட விவசாயிகளுக்கான பல விஷயங்களுக்காகப் போராடுன நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் திறந்துருக்காங்க. விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்குறதுக்காக அந்தக்காலத்துல ‘கோவை வடக்கு தாலுக்கா விவசாயிகள் சங்கம்’னு ஆரம்பிச்சாங்க. அந்தச் சங்கத்துக்கு 1972-ஆம் வருஷம் தலைவரானார், நாராயணசாமி நாயுடு. அப்போ இலவச மின்சாரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த ‘கட்டை வண்டி போராட்டம்’ இன்றும் மறக்க முடியாதது. தமிழ்நாடே ஸ்தம்பிக்கிற அளவுக்கு அந்தப்போராட்டம் நடந்துச்சு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

.

[X] Close