வருமான வரிச் சேமிப்பு... இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ஏன் சிறந்தது? | Why ELSS is the best tax saving investment option? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

வருமான வரிச் சேமிப்பு... இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ஏன் சிறந்தது?

ங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ் (ELSS - Equity Linked Savings Scheme) ஃபண்டில் முதலீடு செய்தால் வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். இந்த ஃபண்டில் செய்யும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு உண்டு. இந்த ஃபண்டில் போட்ட முதலீட்டை மூன்று ஆண்டுகள் வெளியில் எடுக்கமுடியாது. மாதம் குறைந்தபட்சமாக 500 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம்.

யாருக்கு ஏற்றது?

இந்த இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியானது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால் வருமானம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைச் சார்ந்திருக்கும்.

அந்த வகையில், முதலீட்டின்மீது ரிஸ்க் எடுக்க கூடியவர்களுக்கு ஏற்றதாக இந்த ஃபண்ட்  இருக்கிறது. ஆனால், நீண்ட காலத்தில் இந்த ரிஸ்க் என்பது பரவலாக்கப்பட்டுவிடுகிறது.

இ.எல்.எஸ்.எஸ் செய்யப்பட்ட முதலீட்டை அதன் லாக்இன் பிரீயட் மூன்றாண்டுகள் முடிந்ததும் பெரும்பாலோர்  எடுத்துவிடுகிறார்கள்.  அது தேவை இல்லை. பணத்தை எடுக்கும்போது முதலீடு எவ்வளவு வளர்ந்திருக்கிறது, எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதையறிந்து எடுப்பது அவசியம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close