எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது! | Thamimun Ansari MLA talks about current TN Politics - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது!

மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி

குழம்பிய குட்டையாகி இருக்கிறது, இன்றைய தமிழக அரசியல் சூழல். முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவு, தமிழக அரசியலில் வெற்றிடங்களை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தமிழக அரசியலைக் கடந்து, தேசிய அரசியலையும் தீர்மானிக்கும் சக்திகளாகத் திகழ்ந்தனர். இப்போதைய அரசியலில் போர்க்கருவிகளாக இருக்கவேண்டிய அவர்கள், நம்மிடையே இல்லாதது வேதனையளிக்கிறது.

‘அவர்கள் இல்லை என்றால், அரசியலே இல்லையா...’ என்று கேட்கலாம். காலம் புதியவைகளைப் பிரசவிக்கக்கூடியது. அதன் வழியான மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அரசியல் என்பதே நிகழ்வுகளின் விளையாட்டு. அது, பழையவர்களை வலிமைப்படுத்தும்; புதியவர்களை அறிமுகப்படுத்தும்; சிலரைப் புரட்டிப் போடும். இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போன்ற ஆளுமைகள் களமாடுகிறார்கள். தத்துவங்களை முன்வைத்துச் செயல்படும் இடதுசாரி தோழர்களும் செங்கொடிகளோடு அணிவகுக்கிறார்கள். சினிமா பிரபலங்களும் கண்சிமிட்டுகிறார்கள். இவர்களில் எதிர்கால அரசியல் தலைமை யார் என்பது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெளிவாகிவிடும். இதில், முதல் இரண்டு இடங்களைப் பெறும் கட்சிகள்தான், தமிழக அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அதன் தலைவர்கள் தனிப்பெரும் சக்திகளாக உருவெடுப்பார்கள். இதில் மூன்றாவது இடம் பெறுபவர்களும், முதல் இரு கட்சிகளின் தலைமையைச் சுற்றிவரும் சூழலே உருவாகும்.

மூன்றாம் அணிமீதான நம்பிக்கை, மக்கள் நலக் கூட்டணியோடு முடிந்துவிட்டது. அவர்கள் நீண்ட எதிர்பார்ப்பின் வடிவமாகத் திரண்டார்கள். செல்வாக்குமிக்க கட்சிகள், ஆளுமைமிக்க தலைவர்கள் ஒன்றுபட்டு அவர்கள் பலம்காட்டியும்கூட, அவர்களை மக்கள் ஆதரிக்காததும், சில தொகுதிகளில்கூட வெற்றிகளை வழங்காததும் ஏன் என்பது ஆய்வுக்குரியது. அதுபோல், ‘கோடம்பாக்கம்’ அரசியலையும் தமிழக மக்கள் ஆதரிக்கவில்லை. எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என்பதையும் நிகழ்கால அரசியல் களம் உணர்த்திவருகிறது. அவர்களால் அவர்களது ரசிகர்களை மட்டுமே ஈர்க்க முடியும்.

[X] Close

[X] Close