‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்!’ | ADMK successful running by OPS and EPS as Jayalalitha style - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்!’

முனைவர் வைகைச்செல்வன், மேனாள் கல்வி அமைச்சர் - அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்

மிழகத்தின் இன்றைய அரசியல் சூழல், நாளுக்குநாள் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. தடுக்கி விழுந்தால் கட்சிகள் ஆரம்பிக்கும் காலமாக மாறிவிட்டாலும், ஆலமர விழுதுகள்போல் கிளை பரப்பிக் கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எத்தனை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும், யாராலும் வீழ்த்த  முடியாத சுயம்புவாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் முன்னேற்றம் என்பது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அதன் பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின்  வருகைக்குப் பின்னர்தான் புது வேகம் எடுத்தது. அந்தத் தலைவர்களின் வரிசையில், எளியவர்களாகவும், தவிர்க்க முடியாத சக்தியாகவும் ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் திகழ்கிறார்கள்.

அ.தி.மு.க-வின் இரண்டாம் வரலாற்றை எழுதிய தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஒன்றரை கோடித் தொண்டர்கள் கொண்ட பேரியக்கத்தின் பெரும் தலைவி. புதுடெல்லியைத் தமிழகத்துக்கு வரவழைத்த கம்பீரம். வாழ்வின் இறுதிவரை வீழ்ந்துவிடாத வீரம், மண்டியிடாத மானம் என்பதற்கேற்ப தன் வாழ்வை அமைத்துக்கொண்ட தலைவி.

மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் முதலமைச்சரின் அரிய திட்டம் தமிழகத்தில் வறுமையை விரட்டி, பசியைப் போக்கியுள்ளது. அது மட்டுமல்லாமல், குறைந்த வருவாய் உடையவர்களுக்கு அம்மா உணவகம் ஒரு வரப்பிரசாதமாகும். தினமும் லட்சக்கணக்கான மக்களின் பசியைப் போக்குவதுடன், பாராட்டையும் பெற்றுள்ளது.

[X] Close

[X] Close