எண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்? | Poor maintenance of Enkan Subramania swamy temple - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

எண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்?

திருவாரூர் மாவட்டம், எண்கண் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பல்வேறு சீர்கேடுகள் காரணமாக அவலநிலையில் இருக்கிறது. இதற்குக் காரணம், நிர்வாகக் குறைபாடுகள்தான் என்று எண்கண் கிராம மக்கள் நம்மிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு நேரில் சென்று கோயிலைப் பார்வையிட்டோம். இதோ ஒரு லைவ் ரிப்போர்ட்...

கோயில் வளாகத்துக்குள் நுழைந்தபோதே எங்கும் முட்புதர்கள் மண்டியிருப்பதைக் காணமுடிந்தது. அதில் ஒரு முள் நமது காலைப் பதம்பார்த்து விட்டது. காலைக் கழுவலாம் என்று கிணற்றை எட்டிப்பார்த்தோம்... அது சாக்கடையாக மாறியிருந்தது. சரி, தண்ணீர் இருக்குமா என்று திருமண மண்டபத்துக்குள் நுழைந்தோம். அது திறந்தவெளி டாஸ்மாக் ‘பார்’போலவே காட்சியளிக்கிறது. கொஞ்சம் நகர்ந்து சென்று உடைந்துகிடைந்த தேரில் தெரியாமல் கை வைத்துவிட்டோம். கையெங்கும் கரையான்கள் ஏறிவிட்டன. கழிப்பறை பக்கம் சென்றால்... ம்ஹூம், அதை எழுத முடியவில்லை. என்னதான் ஆயிற்று இந்தக் கோயில் நிர்வாகத்துக்கு?

[X] Close

[X] Close