ஒரு நாக்கு... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்! | Ramadoss comments to ADMK Govt on different period - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

ஒரு நாக்கு... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்!

“கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும், இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை. இதிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில், மற்ற யாரையும்விட நான் தெளிவாக இருக்கிறேன்’’ என்று சொன்ன பா.ம.க நிறுவனர் ராமதாஸ்தான், தற்போது அ.தி.மு.க-வுடன் கூட்டணி கையெழுத்தானவுடன் அதற்கு கீழ்கண்ட விளக்கத்தையும் கொடுத்துள்ளார். “மிக நீண்ட சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு கொள்கைகளில் தேக்குமரமாக இருந்தாலும், கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்.” சரி, இதென்ன பிரமாதம்... கடந்த காலங்களில் அ.தி.மு.க தலைவர்கள் விடுத்த அறிக்கைகளுக்கும், அந்தக் கட்சி தொடர்பாக வெளியான செய்திகளுக்கும் தனது டிவிட்டரில் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார் ராமதாஸ்?

[X] Close

[X] Close