“அம்மாவை மறந்த அ.தி.மு.க!” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை... | ADMK not care of Jayalalitha birthday celebrations - Junior Viaktan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

“அம்மாவை மறந்த அ.தி.மு.க!” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...

ம்மா, தங்கத்தாரகை என்றெல்லாம் ஜெயலலிதாவைப் போற்றித் துதித்தவர்களும், அவரது கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக்கிடந்தவர்களும், அவரது கார் டயர்களோடு உருண்டவர்களும் ஏராளம். ஆனால், ஜெயலலிதா மறைந்து இரு ஆண்டுகள் கடந்த நிலையில், அவரது பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கான அறிவிப்பை பிப்ரவரி 20-ம் தேதிதான் ‘நமது அம்மா’ நாளிதழில் அ.தி.மு.க தலைமை வெளியிட்டுள்ளது. கடைசிநேர இந்த அறிவிப்பால் கழகத் தொண்டர்களும், பேச்சாளர்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை, அவரது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடுவதில் மாவட்டச் செயலாளர்களுக்குள் கடும் போட்டி நடக்கும். தீச்சட்டி ஏந்துவது, பால் காவடி எடுப்பதுவரை கோயில்களில்  சிறப்புப் பூஜைகள் நடைபெறும். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதிலும், வருவாயைப் பெருக்கிக் கொள்வதிலுமே அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதுவரை ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டங்களுக்கான தேதி மற்றும் பேச்சாளர்கள் பட்டியல் ஆகியவற்றை அ.தி.மு.க தலைமை வெளியிடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

[X] Close

[X] Close