வேர்க்கடலை ரெசிப்பி | Peanut recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

வேர்க்கடலை ரெசிப்பி

மீனா சுதிர்

வேர்க்கடலையை நொறுக்குத்தீனியாகச் சாப்பிடாதவர்கள் உலகில் யாரேனும் இருக்கிறார்களா? உலர்ந்த வெவ்வேறு பயிறுகளோடு வேர்க்கடலையையும் கலந்து உலகின் பல தெருக்களில் விற்கிறார்கள். பீநட் பட்டர், அதாவது வேர்க்கடலை பட்டரை சாண்ட்விச்சில் தடவி சாப்பிடுவதும் வழக்கம். சீனியர் சிட்டிசன்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவாக 1890 வாக்கில் ஒரு மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டதே இந்த `பீநட் பட்டர்’ எனச் சொல்லப்படுகிறது. வேர்க்கடலைக்கென்று அதற்கே உரிய மணமும் ருசியும் உண்டு. அதனால்தானோ என்னவோ இந்தோனேஷியாவின் பீநட் சாஸ், மேற்கு ஆப்பிரிக்காவின் சூப், சைனீஸ் நூடுல்ஸ், பெரு நாட்டின் ஸ்ட்யூ, பீநட் பட்டர் போடப்பட்ட சாண்ட்விச் எல்லாமே ஒரேவிதமாக ருசிக்கிறதோ?