வளமான வருமானம் தரும் வான்கோழி வளர்ப்பு! - 300 வான்கோழிகள்... ரூ. 2,40,000 வருமானம்! | Profitable farming business - Turkey - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/03/2019)

வளமான வருமானம் தரும் வான்கோழி வளர்ப்பு! - 300 வான்கோழிகள்... ரூ. 2,40,000 வருமானம்!

கால்நடை

விவசாயத்தோடு கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டால்... தண்ணீர்ப் பற்றாக்குறை, விலையின்மை, ஆள் பற்றாக்குறை போன்ற பலவிதப் பிரச்னைகளையும் எளிதாகச் சமாளித்து வருமானம் ஈட்டிவிட முடியும். அதனால்தான், பெரும்பாலான விவசாயிகள் தோட்டத்தின் ஒரு பகுதியில் மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு எனக் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள். அந்தவகையில், தண்ணீர்ப் பற்றாக்குறையால் தரிசாகக் கிடந்த நிலத்தில் வான்கோழிப் பண்ணை அமைத்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சாலமன்.