மாண்புமிகு மருத்துவர்கள் - திருமதி சுபாஷினி - டாக்டர் அஜோய் குமார் | Doctor Service: Subhasini Mistry - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

மாண்புமிகு மருத்துவர்கள் - திருமதி சுபாஷினி - டாக்டர் அஜோய் குமார்

சேவை - 15

ந்த அத்தியாயம் மாண்புமிகு மருத்துவர் ஒருவரின் வாழ்க்கைப் பாதை மட்டுமல்ல. அவரின் தாயாரின் அசாத்தியமான வெற்றிக்கதையும்கூட. கொல்கத்தாவில் இயங்கும் ஆதரவற்றோர் இல்லம் ஒன்று. அங்கே அஜோய் குமார் சேர்க்கப்பட்டான். அவனைக் கொண்டு வந்து சேர்த்தவர் அவன் தாய் சுபாஷினி மிஷ்ட்ரி. காரணம்... வறுமை. ஆம், அங்கேயாவது தன் மகனுக்கு இரண்டு வேளை உணவு கிடைக்கும்; கல்வி கற்க வாய்ப்்பு கிடைக்கும் என்று அந்தத் தாய் நினைத்தாள். தவிர, அவளுக்கு ஒரு லட்சியம் இருந்தது. அதைத் தன் மகன் மூலமாக நிறைவேற்றுவதற்காகவே அவனை அந்த இல்லத்தில் சேர்த்தாள். ஆனால், அதற்காக அஜோய் வருத்தப்படவில்லை. ஏனென்றால், அவனுடைய நெஞ்சிலும் தாயின் லட்சியம் ஆழப் பதிந்திருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க