தொற்றுநோய்களின் உலகம்! - 30 | World of infectious disease - awareness - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

தொற்றுநோய்களின் உலகம்! - 30

ஹெல்த்

டந்த இதழில் ‘ஆன்டி ஃப்ளூ’ மாத்திரை பற்றி எழுதியிருந்ததைக் குறிப்பிட்டு சில வாசகர்கள் பேசினார்கள். அவர்களுக்காக இந்தச் செய்தி..! ஆன்டி ஃப்ளூ மாத்திரை என்பது நிச்சயம் நம்பகமானது. பன்றிக்காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் அந்த மாத்திரைக்கு உண்டு. ஆனால், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ‘ஆன்டி ஃப்ளூ’ மாத்திரை பெரிய அளவில் பலன் தருவதில்லை என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல தடுப்பூசி குறித்தும் சிலர் சந்தேகம் எழுப்பியிருந்தார்கள். மருத்துவ நிபுணர்கள் தீவிரமான ஆய்வின் மூலம் கண்டறிந்து, ‘இந்த ஆண்டு இந்த வகை ஃப்ளூ வைரஸின் தாக்கம் அதிகமிருக்கும்’ என்று சொல்வதன் பேரில் மருந்து நிறுவனங்கள் அந்த வைரஸைத் தடுக்கும் மருந்துகளைத் தயாரித்து, விற்கின்றன. சில நேரங்களில் அந்தக் கணிப்பு தவறாகிவிடும். அந்தத் தருணத்தில் தடுப்பூசி பயனளிக்காது. ஒட்டுமொத்தமாக தடுப்பூசியே பயனளிக்காது என்பதல்ல. சில நேரங்களில் அப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது.