ஒரு பெண்ணால் என்னவெல்லாம் செய்ய முடியும்? | Brindha IAS Motivational story - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2019)

ஒரு பெண்ணால் என்னவெல்லாம் செய்ய முடியும்?

பிருந்தா ஐ.ஏ.எஸ்

“பிறக்கும்போது சாதாரண ஆளா பிறந்தாலும், இறக்கும்போது சாதனையாளரா இருக்கணும்” - புதிய நம்பிக்கை விதைக்கிறார் பிருந்தா ஐ.ஏ.எஸ். ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றும் தமிழ்ப் பெண். பழங்குடி மக்கள் அதிகம் வாழும் அம்மாவட்டத்தில் கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை கொடுத்து அதை வளர்ச்சி மாவட்டமாக்கியுள்ளார். சமீபத்தில் மறைந்த ‘சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி’யின் நிறுவனர் சங்கரின் தங்கையான பிருந்தா, தன் வாழ்வின் பவர்ஃபுல் நிமிடங்களைப் பகிர்கிறார்.