பேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்! | IPL Season 12 2019 - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

பேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்!

சென்னையின் வீதிகள் மஞ்சள் வண்ணம் பூசத் தயாராகிவிட்டன. விசில்களின் ஓசை விண்ணைப் பிளக்கப்போகிறது. நாற்பதாயிரம் ரசிகர்கள் ‘சியெஸ்கே... சியெஸ்கே’ என்று ஒருசேரக் கூச்சலிட, சேப்பாக்கத்தின் ஒலியை உலகெங்கும் எடுத்துச் செல்லப்போகின்றன மெரீனாவின் அலைகள். ஆம், இந்த முறை சிங்கத்தின் குகையிலிருந்தே தொடங்குகிறது ஐ.பி.எல் கோப்பைக்கான வேட்டை. 2019 ஐ.பி.எல்-லின் ஹைலைட்ஸ் மட்டும் இங்கே!

நாடாளுமன்றத் தேர்தல், கிரிக்கெட் உலகக்கோப்பை என இருபெரும் சிக்கல்களைச் சமாளித்து ஒருவழியாக மார்ச் 23-ம் தேதி தொடங்கப்போகிறது இந்தியன் பிரீமியர் லீகின் 12-வது சீஸன். சில அணிகள் கடந்த ஆண்டைப்போல் அப்படியே இருக்கின்றன. ஓரிரு அணிகள் மொத்தமாக மாறியிருக்கின்றன. ஒரு அணி தன் அடையாளத்தையே மாற்றிக் களமிறங்குகிறது. ஃபின்ச், மேக்ஸ்வெல், ஸ்டார்க் போன்ற வீரர்களை இழந்திருக்கும் ஐ.பி.எல், சாம் கரண், ஆஷ்டன் டர்னர், ஹிட்மேயர் என இளைஞர்களை வரவேற்றுப் புதுப்பொலி வடைந்திருக்கிறது.