யூரியா தேவையில்லை... சிறுநீரே போதும்! - மத்திய அமைச்சரின் அனுபவ பாடம்! | Nitin Gadkari`s latest idea: Use Urine to reduce Urea import - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/03/2019)

யூரியா தேவையில்லை... சிறுநீரே போதும்! - மத்திய அமைச்சரின் அனுபவ பாடம்!

ஆலோசனை

காராஷ்டிர மாநிலம், நாக்பூரில் சமீபத்தில் நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “நமது நாட்டில் மனிதர்களின் சிறுநீரைச் சேமிக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சிறுநீரைச் சேமித்து வைக்குமாறு சொல்லி வருகிறேன். விவசாய நிலங்களில் யூரியாவுக்குப் பதிலாகச் சிறுநீரைப் பயன்படுத்தலாம். சிறுநீரில் நைட்ரஜன் மற்றும் அம்மோனியம் சல்பேட் ஆகியவை உள்ளன. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு... வெளிநாடுகளிலிருந்து யூரியாவை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். சிறுநீரைப் பயன்படுத்த தொடங்கிவிட்டால், யூரியா இறக்குமதி செய்ய வேண்டிய தேவையிருக்காது” என்று பேசியுள்ளார்.