தினமும் ஒரு காய்... ஒரு கீரை! | Terrace Garden - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/03/2019)

தினமும் ஒரு காய்... ஒரு கீரை!

மாடித்தோட்டம்

“என் பொண்ணு சின்ன வயசுல இருக்குறப்போ சூப்பர் மார்க்கெட்ல மிஷின்லதான் காய்கறிகளைத் தயார் பண்ணுவாங்களானு கேட்பா. அதுதான் நான் வீட்டுத்தோட்டம் அமைச்சதுக்கு முக்கியக் காரணம். விவசாய நாட்டுல இப்படியொரு நிலைமையானு யோசிச்சு... பிள்ளைகளுக்குச் சொல்லித் தரணுங்கிறதுக்காகவே இந்தத்தோட்டத்தை உருவாக்கினேன்” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார், சென்னை, கோவிலம்பாக்கம் அருகே உள்ள சுண்ணாம்புகொளத்தூரைச் சேர்ந்த அகிலா குணாளன்.