கவுரவ ஊக்கத்தொகையும் அபத்தமான விதிமுறைகளும்! | PM-Kisan scheme: About 4.74 crore farmers to get 2nd installment - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/03/2019)

கவுரவ ஊக்கத்தொகையும் அபத்தமான விதிமுறைகளும்!

ஏமாற்றம்

மோடி தலைமையிலான மத்திய அரசு, அண்மையில் நாடாளுமன்றத்தில் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில்  ‘சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் கவுரவ ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்தொகை மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் விவசாயிகளிடையே வரவேற்பை உண்டாக்கிய நிலையில்... அடுத்தச் சில நாள்களில் இத்திட்டத்தின் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. அந்த விதிமுறைகளைப் பார்த்து விவசாயிகள் கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.