அன்பு பேசும் அரும்பு மொழி! | Arumbu Mozhi app for Autism kids - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

அன்பு பேசும் அரும்பு மொழி!

திறமையற்றவர் என்று இந்த உலகில் யாருமே இல்லை. ஆனால், ஒரு சிலரை அப்படியாக நினைத்து ஒதுக்கிவிடுகிறோம். அவர்களை முன்னேற்றுவதற்கான  செயல்களும் இங்கே குறைவாகவே உள்ளன.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்று, சாப்பாடு ஆர்டர் செய்வது தூங்கப்போகும் வரை எல்லாவற்றுக்கும் செயலிகள் (APPS) வந்துவிட்டன. அந்த வகையில், ஆட்டிஸம் எனும் அறிவுசார் வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்காகத் தமிழில் ‘அரும்பு மொழி’ என்ற ஆப் உருவாகியுள்ளது.