திருவாரூரை தக்க வைக்குமா தி.மு.க? | Thiruvarur by-election winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

திருவாரூரை தக்க வைக்குமா தி.மு.க?

- திருவாரூர்

றைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சொந்தத் தொகுதி என்பதால், மக்களுக்கும் தி.மு.க-வுக்கும் இடையே பாசப்பிணப்பு இருக்கிறது. அவரது மறைவையொட்டி நடைபெறும் இந்த இடைத்தேர்தலில், தி.மு.க சார்பில் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க- வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஜீவானந்தமும், அ.ம.மு.க சார்பில், எஸ்.காமராஜும் போட்டியிடுகின்றனர்.

பூண்டி கலைவாணன் குடும்பம் நீண்டகாலமாக அரசியல் களத்தில் இருப்பதால், தொகுதி மக்களுக்கு இவர் நன்கு பரிச்சயம். தி.மு.க கூட்டணிக் கட்சிகளும் இங்கு ஓரளவு செல்வாக்குடன் இருப்பது, கூடுதல் பலம். தி.மு.க சார்பில் தேர்தல் செலவுகளுக்குத் பெரிய அளவில் பணம் இல்லாதது, மைனஸ்.

‘‘மத்தியப் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி என இத்தொகுதிக்கு தி.மு.க நிறையச் செய்துள்ளது. எங்கள்மீது திருவாரூர் மக்களுக்கு எப்போதுமே நம்பிக்கை அதிகம். ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்’’ என்கிறார் கலைவாணன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க