தினகரனுக்கு செல்வாக்கு அதிகம்! - ஆண்டிபட்டி | Andipatti by-election winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

தினகரனுக்கு செல்வாக்கு அதிகம்! - ஆண்டிபட்டி

ண்டிபட்டி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் லோகிராஜனும், தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கும் மகாராஜனும் உடன்பிறந்த அண்ணன், தம்பிகள். கடந்த முறை இங்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தங்கதமிழ்ச் செல்வன்,  தினகரன் பக்கம் தாவியதால் தகுதிநீக்கம் செய்யப் பட்டார். அவர் தற்போது தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி யிடுவதால், அ.ம.மு.க சார்பில் ஜெயக்குமார் நிற்கிறார்.   தொகுதியி லுள்ள பிரமலைக் கள்ளர் சமூக வாக்குகள்தான், வெற்றியைத் தீர்மானிக்கும். அதனால் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க ஆகிய மூன்று கட்சிகளுமே அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே களத்தில் நிறுத்தியிருக்கிறது. தொகுதியில் பிரமலைக் கள்ளர் சமூகத்துக்கு அடுத்தபடியாக ஒக்கலிக்ககவுடர் சமூக வாக்குகள் அதிகம் உள்ளன. தண்ணீர் பிரச்னை, வருஷநாடு மலை விவசாயிகள் பிரச்னைகள்தான் தொகுதியில் முதன்மையானவை. இவற்றையே அரசியல் கட்சிகளும் கையில் எடுத்து, வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன.

அதிகம் படித்தவை