வெற்றியைத் தீர்மானிப்பாரா சுயேச்சை வேட்பாளர்? - விளாத்திகுளம் | Vilathikulam by-election winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

வெற்றியைத் தீர்மானிப்பாரா சுயேச்சை வேட்பாளர்? - விளாத்திகுளம்

தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது விளாத்திகுளம் தொகுதி. இங்கு அ.தி.மு.க சார்பில் சின்னப்பன், தி.மு.க சார்பில் ஜெயகுமார், அ.ம.மு.க சார்பில் ஜோதிமணி போட்டியிடுகின்றனர். இவர் களுக்கு இடையே, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் சுயேச்சையாகக் களம் இறங்கியிருக்கிறார் மார்கண்டேயன்.

மார்கண்டேயன், சின்னப்பன், ஜெயகுமார் மூவரும் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதில், மார்கண்டேயனுக்குச் செல்வாக்கு அதிகம். ‘தொகுதி மக்களுக்கு ஒரு உதவி என்றால் ஓடோடிச் செல்வார்’ என்கிறார்கள். இது மார்கண்டேயனுக்கு பலம். ‘‘இதேத் தொகுதியில் யூனியன் சேர்மனாகவும், எம்.எல்.ஏ-வாகவும் இருந்திருக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாகத் தொகுதி மக்களுடன் நல்ல உறவு இருக்கிறது. மக்கள் மட்டுமல்ல... எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும் என்னை எளிதாக அணுக முடியும். தொகுதியை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்ல மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறேன்’’ என்கிறார் மார்கண்டேயன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க