மும்மொழி தொகுதியில் முன்னேற்றம் யாருக்கு? - ஓசூர் | Hosur by-election winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

மும்மொழி தொகுதியில் முன்னேற்றம் யாருக்கு? - ஓசூர்

சூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த, விளையாட்டுத்துறை அமைச்சரான பாலகிருஷ்ண ரெட்டி 1998-ல் பாகலூரில் கள்ளச்சாராயத்துக்கு எதிரான போராட்டத்தில் அரசு வாகனங்களை எரித்த வழக்கில் சிக்கினார். சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததால், எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இதைத்தொடர்ந்தே  ஒசூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கு அ.தி.மு.க சார்பில் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி, தி.மு.க சார்பில் ஓசூர் நகரச் செயலாளர் சத்யா, அ.ம.மு.க சார்பில் பெங்களூர் புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். ஓசூர் சட்டமன்றத் தொகுதி தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநில எல்லையில் அமைந்துள்ளதால், தமிழ், தெலுங்கு கன்னடம் என்று மும்மொழி பேசும் மக்கள் கணிசமாக வசிக்கிறார்கள். தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதும் இவர்களே.