“என் கணவர் தற்கொலையில், அமைச்சரின் அழுத்தம் இருந்தது!” | Sadiq Basha wife Rekha Banu interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

“என் கணவர் தற்கொலையில், அமைச்சரின் அழுத்தம் இருந்தது!”

சொல்கிறார் சாதிக் பாட்ஷா மனைவி

‘கூடா நட்பு கேடாய் முடியும்’ வாசகம் தமிழக அரசியலில், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. கடந்த மாதம் சாதிக்பாட்ஷா நினைவஞ்சலி போஸ்டரில், மேற்கண்ட வாசகம் இடம் பெற்றிருந்தது. அடுத்த மூன்று தினங்களுக்குள் சாதிக் பாட்ஷாவின் மனைவி ரெஹா பானு சென்ற கார்மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், ரெஹா பானுவைத் தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.