இன்ஜின் புதுசு... அதே சொகுசு! | First Drive: Jaguar XF 20t petrol - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

இன்ஜின் புதுசு... அதே சொகுசு!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஜாகுவார் XF 20t பெட்ரோல்

ஸ்போர்ட்டியான லக்ஸூரி செடான்களின் லிஸ்ட்டில் ஜாகுவாரைத் தவிர்க்கவே முடியாது. XF அப்படிப்பட்ட  ஒரு கார்தான். இதன் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் 180bhp பவரை வெளிப்படுத்தினாலும், அது இந்த செடானின் குணாதிசயத்துடன் பொருந்தவில்லை. முந்தைய XF மாடலில் இருந்த 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் (200bhp/240bhp), ஜாகுவார் நிறுவனம் ஃபோர்டு வசம் இருந்தபோது தயாரிக்கப்பட்டவை என்பதால், இந்தப் புதிய மாடலில் அவை இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக, தனது Ingenium சீரிஸ் - 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை, 20t(200bhp)/25t(250bhp) எனும் இரு வேரியன்ட்களில், XF செடானில் அறிமுகப்படுத்தியுள்ளது ஜாகுவார். நாம் ஓட்டியது 200bhp வேரியன்ட்டான ஜாகுவார் XF 20t. முந்தைய பெட்ரோல் இன்ஜினுடன் ஒப்பிடும்போது, இது எப்படி இருக்கிறது?

நீங்க எப்படி பீல் பண்றீங்க