பட்ஜெட் கார்களில் சூப்பர் டீலக்ஸ்! | Maruti Suzuki Wagon R vs Hyundai Santro vs TataTiago - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

பட்ஜெட் கார்களில் சூப்பர் டீலக்ஸ்!

போட்டி: மாருதி சுஸூகி வேகன்-R VS ஹூண்டாய் சான்ட்ரோ VS டாடா டியாகோ

முதல் முறை கார் வாங்குபவர்களின் பட்டியலில் ஹேட்ச்பேக் கார்கள்தான் அதிகம் இருக்கும். எளிமையான டிசைன், பிராக்டிக்கலான வசதிகள், டிராஃபிக்கில் சிரமமில்லாத டிரைவிங், பராமரிப்பு குறைவான இன்ஜின், லாங் டிரைவ் செல்லும்போது நம்மைக் குதூகலப்படுத்த இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம் என ஒரு பட்ஜெட் காருக்குப் பல தேவைகள் உண்டு. தற்போது சந்தையில் டாடா டியாகோவும், ஹூண்டாய் சான்ட்ரோவும் மக்களுக்குப் பிடித்த கார்களாக இருக்கின்றன. புதிதாகக் களமிறங்கியிருக்கும் மாருதி சுஸூகி வேகன்-R,  இந்த இரண்டு கார்களுக்கு இடையில் தனி இடத்தைப் பிடிக்குமா?!