யானைகள் சூழ் உலகில் எக்ஸ்யூவி காரில்... கோவை - தெப்பக்காடு | readers great escape - XUV500 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

யானைகள் சூழ் உலகில் எக்ஸ்யூவி காரில்... கோவை - தெப்பக்காடு

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: XUV500 - டீசல்

ஸல் சிக்ஸர்களாகப் பறக்கவிடுகிறார். வெயில் செல்ஷியஸ்களாக ஏறி வியர்க்கவிடுகிறது. இந்த வெயிலில் இருந்து தப்பிக்க, தமிழ்நாட்டில் ரெண்டே சாய்ஸ் ஊட்டியோ, கொடைக்கானலோதான். `ஆ... ஊ...ன்னா ஊட்டிதானா?’ என்பவர்களுக்காகத்தான் பக்கத்தில் அற்புதமான அட்வென்ச்சர் ஸ்பாட் இருக்கிறது. தெப்பக்காடு. கிட்டத்தட்ட ஊட்டி க்ளைமேட்டுக்கு ஒண்ணுவிட்ட தம்பி மாதிரியே ஜிலுஜிலுனு வெயில் அடிக்கும் தெப்பக்காடுதான் முதுமலை யானைகள் முகாம். ஊட்டி தாண்டி கல்லட்டி வழியே இறங்கினால் மசினகுடி. அடுத்து தெப்பக்காடு. ``அங்கிள், யானைங்க பார்க்கலாமே... அங்கேயே போலாம்!’’ என்றான் செந்தில் மாரிமுத்துவின் புதல்வன் தருண்.

``ஃபர்ஸ்ட் ஹேரியர்தான் வாங்கப் போனோம். ஹேரியர் இன்ஜின் வைப்ரேஷன் எனக்குப் பிடிக்கலை. இப்போ எனக்கு ரொம்பப் பிடிச்ச கார் XUVதான்!’’ என்றான் தருண். பெரிய 7 சீட்டர் காரில் புகைப்பட நிபுணரோடு சேர்த்து ஐந்தே பேர் மட்டும் எஸ்கேப் ஆன அற்புதமான கிரேட் எஸ்கேப்பில் எக்கச்சக்க அனுபவங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க