சென்னை to பர்மா... யமஹா RX போல வருமா?! | Yamaha RX: Chennai to Burma - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

சென்னை to பர்மா... யமஹா RX போல வருமா?!

ரு பைக்கின் விலை, காலம் போகப் போக குறைந்துகொண்டே போகும். ஆனால் யமஹா RX பைக்கின் விலை மட்டும் கூடிக்கொண்டே போகிறது! 80-களில் புது பைக்காக 40,000 ரூபாய்க்கு விற்பனையான RX-135, இப்போது பழைய பைக் சந்தையில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்வரை விற்பனையாகிறது. இத்தனை பெருமைகள் கொண்ட RX135 பைக்கில், சென்னையில் இருந்து பர்மாவுக்குச் சென்று வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம்.

‘‘எவ்வளவுதான் டெக்னாலஜி வளர்ந்தாலும், 2 ஸ்ட்ரோக் RX-135 பைக்கில் கிடைக்கிற திருப்தி வேறு எங்கும் கிடைக்காது’’ எனும் ஸ்ரீராம், இப்போது தினமும் பயன்படுத்தும் பைக் RX-135தான். கல்லூரி படிக்கும்போது மூன்றாவது ஓனராக வாங்கிய இந்த பைக்கில், கன்னியாகுமரி முதல் இமயமலை வரை பயணம் செய்து விட்டார். அதன்பிறகுதான் இந்த பர்மா பயணம்.