34,12,000 நன்றி! | Indian Readership Survey result no.1 vikatan - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/05/2019)

34,12,000 நன்றி!

வணக்கம்

தழியல் வரலாற்றில் இன்னுமொரு மைல்கல்லைத் தொட்டிருக்கிறது ஆனந்த விகடன்!

93 வருடங்களாக, உங்கள் அன்பும் ஆதரவும் தோள்கொடுக்க, ‘தமிழர்களின் நம்பர் 1 பத்திரிகை’யாக மீண்டும் மீண்டும் திகழ்கிறான் ஆனந்த விகடன். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ‘Indian Readership Survey - 2019 (Q1)’ ஆய்வறிக்கை முடிவுகள், இதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந்தியா முழுவதும் மாநகரங்கள், நகரங்கள், கிராமங்கள் என்று மக்கள் மத்தியில் பரவலாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

தேசிய அளவில் நடத்தப்படும் இந்த ஆய்வின்படி, இந்தியாவில் வெளியாகும் அனைத்து மொழிப் பத்திரிகைகளில் 12-வது இடம், இந்தி தவிர்த்த பிறமொழி வார இதழ்களில் இந்திய அளவில் இரண்டாவது இடம் என்று முந்தைய ஆண்டின் (2017) ஆய்வைக் காட்டிலும் முன்னேறியிருக்கிறது ஆனந்த விகடன். தமிழ் வார இதழ்களில் தொடர்ந்து முதல் இடத்தைத் தக்கவைத்திருக்கிறது. இந்தப் புகழும் பெருமையும் வாசகர்களாகிய உங்களையே சேரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க