Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வலையோசை - கொக்கரக்கோ

புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு

 

நன்றி... நன்றி... நன்றி!

அன்புள்ள அம்மா அவர்களுக்கு, தமிழகத்தின் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத் தலைவன் எழுதும் நன்றி மடல்.

அம்மா...,

கடந்த ஆட்சிக் காலங்களில் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை எங்கள் வீட்டுக்கான மின் கட்டணம்

சராசரியாக 2,500 வரை கட்டிவந்தேன். ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தில் எங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் மின் சாதனங்களை அதிகம் பயன்படுத்தாத பட்டப்பகல் நேரத்தில் மட்டுமே மின் தடை செய்துவந்த நிலையில், தாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்பு, எங்கள் வீட்டில் உள்ள அனைத்து மின் விளக்குகள், மின் விசிறிகள், டி.வி. மற்றும் மின் சாதனங்களையும் முழுமையாக உபயோகப்படுத்தும் நேரமான மாலை 6.30- மணிக்கு மேல் இரவு 10 மணிக்குள் இரண்டு மணி நேரம் மின் தடை செய்யப்படுவதால், நாங்கள் தினமும் உபயோகிக்கும் மின்சாரத்தின் அளவு வெகுவாகக் குறைந்துவிட்டது.

இதன் காரணமாக, தற்போது எல்லாம் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை 1,500-ல் இருந்து   1,800 வரை மட்டுமே மின் கட்டணம் செலுத்தும் உன்னதமான வாய்ப்பு எங்கள் குடும்பத்துக்கு வாய்த்திருக்கிறது. இப்படியாக... தாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 3,000 வரை மின் கட்டணம் மூலமாக மிச்சமாகி எங்கள் சேமிப்புக் கணக்கில் வரவு வைத்திருக்கிறோம். இதே நிலையில் மின் தடை நேரத்தை நீங்கள் தக்கவைத்துக்கொண்டு இருந்தீர்களேயானால், தங்களின் ஐந்து வருட ஆட்சி முடிவுறும் தருவாயில், என்னைப்போன்ற ஊதாரித்தனமாகச் செலவு செய்யாத ஒவ்வொரு தமிழகக் குடிமகனுக்கும் கிட்டத்தட்ட  

50,000 வரை மின் சிக்கனத்தால் மட்டுமே சேமிப்பு கிடைத்து விடும்!

 

 

 

வீடு என்னும் கனவு!

எனக்கு நன்கு நினைவு தெரிந்தபோது, தரகுக்காரர் வீட்டில்தான் குடியிருந்தோம். இந்த வீட்டில் இருந்துதான் என் பள்ளிப் பயணம் ஆரம்பமானது. மூன்றாம் வகுப்பு முடித்ததும் எங்கள் குடும்பம், என் தாய் ஊரான பெருஞ்சேரிக்கு (மாயவரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவு) குடிபெயர்ந்தது. நான் ஆறாம் வகுப்பு வந்தபோது மீண்டும் மாயவரத்துக்குக் குடி வந்தோம்.

வடக்கு வீதியில் எங்கள் பூர்வீக வீடு. ஆனால், காலச் சூழ்நிலையால் அங்கும் வாடகைக்குத்தான் குடிவந்தோம். இப்படியாக, குடி மாறி குடி மாறி கடந்த 2005-ம் வருடம் ஜனவரி பொங்கல் திருநாள் அன்றுதான், கடந்த வாரம் வரை குடியிருந்த சுப்ரமணியபுரம் வீட்டுக்கு வந்துசேர்ந்தோம். 43 வருடங்கள், கிட்டத்தட்ட 14 முறை குடி மாறியிருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் என்னைப் பார்ப்பவர்கள், 'இப்போது எங்கு குடியிருக்கிறாய்?’ என்று ஒரு டெம்ப்ளேட் கேள்வி கேட்பது வழக்கம் ஆகிவிட்டது!

 

 

 

இதுவே ஒரு போராட்டம்தான்!

அப்பெல்லாம் குடியரசு தினம், சுதந்திர தினம்னா உடனே மனசுக்குள்ள துள்ளலான சந்தோஷம் ஆரம்பிக்கும். சந்தோஷத்துக்கான முதல் காரணம்னா, அன்னிக்கு ஸ்கூல் லீவு. இரண்டாவது காரணம், அன்னிக்கு ஸ்கூலுக்குப் போனா அரை மணி நேரத்துக்கு யார் யாரோ பேசிவிட்டு, சாக்லேட் வேறு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

வீட்டுக்கு வரும்வழியில் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்றால், அங்கும் கொடி ஏற்றிவிட்டு சாக்லேட் தந்துகொண்டு இருப்பார்கள். அங்கு சாக்லேட் வாங்க வேண்டும் என்றால், சில பல உள்ளடி அரசியல்(!) வேலைகள் செய்ய வேண்டும். அது என்னன்னா, ஸ்கூல்ல மிட்டாய் கொடுத்த அடுத்த விநாடியே அங்கிருந்து 'எஸ்’ ஆக வேண்டும். கிராஃப்ட் சார், பி.டி. சார் இருவர் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு வருவதில்தான் த்ரில்லே இருக்கு. அதிலிருந்து இரண்டாவது நிமிடத்தில் நகராட்சி அலுவலகத்தில் ஆஜராகிவிட வேண்டும். அங்கு ஒரு சின்ன அரசியல் வேலையைக் கச்சிதமாகச் செய்தால் வெற்றி நிச்சயம். அது என்னன்னா, எங்கள் வார்டு கவுன்சிலர் தங்கவேல் நிற்கிற இடத்துக்கு வேகமாக முன்னேறி(!) அவர் அருகில் நின்றுகொண்டால் போதும். பிறகு எல்லாமே தானாக நடந்துவிடும். இதுக்கு ஏன் இவ்வளவு முன்னெடுப்புனா, ஸ்கூல்ல எல்லாம் வெறும் ஒத்த காசு சாக்லேட்தான். ஆனால், இங்கு 10 காசு சாக்லேட்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கேம்பஸ்
ஊர் ஊராக ஒலிக்கும் ஓசை !
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close