அடுத்த டி.ஜி.பி யாரு... அடிபடுது அஞ்சு பேரு! | Next Law and Order DGP for Tamil Nadu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/05/2019)

அடுத்த டி.ஜி.பி யாரு... அடிபடுது அஞ்சு பேரு!

தேர்தல் களத்தைவிட பரபரத்துக்கிடக்கிறது, தமிழக காவல்துறை... அடுத்த டி.ஜி.பி யார் என்பதே அதற்குக் காரணம். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி பதவி பவர்ஃபுல்லானது. காவல்துறை வட்டாரத்தில் இதை ‘ஹெட் ஆஃப் தி ஃபோர்ஸ்’ என்று சொல்வார்கள். ஐ.பி.எஸ் அதிகாரிகளின் உச்சபட்ச கனவே இந்தப் பதவிதான். அதனால்தான், தமிழகத்தில் அந்தப் பதவிக்காக ஐ.பி.எஸ் அதிகாரிகள் முட்டிமோதுகிறார்கள்!

தற்போதுள்ள டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரனின் பதவிநீட்டிப்பு அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், முதல்கட்டமாக உயர் அதிகாரிகள் 18 பேர் அடங்கிய பெயர்ப் பட்டியலை மத்திய அரசின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்குத் தமிழக அரசு அனுப்பியிருக்கிறது.  இதில் மூன்று அல்லது ஐந்து பேரை சீனியாரிட்டி அடிப்படையில் தேர்ந்தெடுத்து, மே மாதம் கடைசி வாரத்தில் மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்புவார்கள். அதில் ஒருவரைத் தமிழக அரசு புதிய டி.ஜி.பியாக நியமிக்கும். இந்த லிஸ்ட்டில் பலர் இருந்தாலும் திரிபாதி, ஜாபர் சேட், ஸ்ரீலட்சுமி பிரசாத், அசுதோஷ்சுக்லா, தமிழ்செல்வன்.. ஆகியோரில் யாரை அரசு நியமிக்கப்போகிறது என்பதுதான் கேள்வி.