விகடன் வரவேற்பறை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தென்னிந்தியச் சிறுகதைகள்  தொகுப்பு: கே.வி.ஷைலஜா
வெளியீடு: வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலைபக்கம்: 432  விலை: 300

மிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளின் சமகால எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்ற தொகுப்பு.  ஜே.பி.சாணக்யாவின் 'ஆண்களின் படித்துறை’ (தமிழ்), பெண் இழந்த காதலின் துயரத்தைச் சொல்லும் சந்திராவின் 'காட்டின் பெருங்கனவு’ (தமிழ்), செய்தித்தாளில் அஞ்சலி பக்கத்துக்குப் பொறுப்பான பெண் பத்திரிகையாளர் அன்னா அந்தப் பக்கத்திலேயே இடம்பெறும் கெ.ஆர்.மீராவின் 'செய்திகளின் நாற்றம்’ (மலையாளம்), பாலியல் வன்முறைக்கு உள்ளான ஒரு பெண்ணின் மனநிலையைப் பிரதிபலிக்கும் டி.ஆர்.இந்திராவின் 'பலாத்காரம்’ (தெலுங்கு), ஊரே துக்கிரி என்று சொல்லி ஒதுக்கும் பெண்ணைப் பற்றிப் பேசும் விவேக் ஷேன்பேக்கின் 'காரணபூதம்’ (கன்னடம்) என நவரச உணர்வுகளைக் கொட்டும் கதைகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யம்!  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!