ராயல் டாக்கீஸ் - சிறுகதை

சுகா, ஓவியங்கள்: ஸ்யாம்

 காசிதான் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருந்தான். தம்பி வரப்போவது பற்றி அவன் வீட்டுக்கே அரசல்புரசலாகத்தான் தெரியும். ஆனால், காசிக்கு மட்டும்தான் உறுதியாக இன்ன தேதியில், இந்த ரயிலில் வருகிறேன் என்பதை தம்பி சொல்லியிருந்தான். தம்பியின் உண்மையான பெயரான 'கணபதி சுப்பிரமணியம்’ என்பது, அவனது சர்ட்டிஃபிகேட்டில் மட்டும்தான் உள்ளது. சுந்தரம் சார்வாள் சொல்வார்... 'ஒண்ணு 'கணவதி’னு வெச்சிருக்கணும்; இல்லன்னா 'சுப்ரமணி’னு வெச்சிருக்கணும். அதென்னடே ஒருத்தனுக்கு ரெண்டு பேரு?’ வீட்டிலும் சரி, நண்பர்கள் மத்தியிலும் சரி... கணபதி சுப்பிரமணியம் எப்போதும் தம்பிதான். தாத்தா பெயரைச் சொல்லக் கூடாது என ஆச்சிதான் 'தம்பி’ என விளிக்கத் தொடங்கினாள். ஆச்சி ஒன்றைச் சொல்லிவிட்டால், அதுதான் சட்டம். யாரும் அதை மீற மாட்டார்கள். 'அதென்ன சாவி? 'தொறவேல்’னு சொல்ல மாட்டேளோ?’ என்பாள். 'ஆமா, ஒலகமே 'சாவி’னுதான் சொல்லுது. ஒங்க அம்மைக்கு மட்டும் எங்கே இருந்துதான் வார்த்தை மொளைக்கோ?’ - லோகு பெரியம்மை முனகுவாள். 'ஏட்டி... 'திறவுகோல்’ங்கிறது சுத்தமான தமிள் வார்த்த. அதைச் சொல்றதுக்கு ஒங்களுக்குல்லாம் வலிக்கி... என்னா?’ - சண்முகம் பெரியப்பா ஏசுவார். லோகநாயகியும் சண்முகமும் தம்பிக்கு பெரியம்மை, பெரியப்பா என்பது வெறும் முறைக்குத்தான். ஆனால், தம்பிக்கு அவர்கள்தான் அம்மையும் அப்பாவும்; தம்பி அவர்களை அழைப்பதும் அப்படித்தான். லோகுவை 'அம்மா’ என அழைப்பவன், சண்முகத்தை 'சண்முகப்பா’ என்பான். தம்பியைப் பெற்ற ஒருசில தினங்களிலேயே, அவன் அம்மை போய்ச் சேர்ந்துவிட்டாள். ஏற்கெனவே கொஞ்சம் அப்படி இப்படி இருந்த தம்பியின் அப்பா, சொத்தைப் பிரித்துத் தரச் சொல்லி சண்டை போட்டு வாங்கிக்கொண்டு, யாரோ ஒரு பெண்ணுடன் எங்கோ காணாமலேயே போனார். அதற்குப் பிறகு தம்பியை வளர்த்தது, ஆச்சியும் லோகநாயகியும் சண்முகமும்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்