ஊமைக்காயமா? - உடனே கவனியுங்கள்!

ஹெல்த்சுந்தரராமன், பொது மருத்துவர்

முரட்டுத்தனமான தாக்குதல், திடீரெனக் கீழே விழுதல், மோதுதல் போன்றவற்றால் திசுக்கள் காயமடைந்து வெளியே காயம் தெரியாமல் உண்டாகக்கூடிய உள்வீக்கமே ஊமைக்காயம். உடலின் ஏதாவது ஒரு பகுதியில் திடீரென அடிபடும்போது தோல் கிழியாமல் அல்லது சிதையாமல் இருக்கும். ஆனால் உடலின் உள்பகுதியில் தசைநார்கள் பாதிப்படைந்து சிராய்ப்பு அல்லது கன்றிப்போகும் நிலை ஏற்படும்.  இதுதான் ஊமைக்காயத்தின் நிலை.

ஊமைக்காயம் உண்டாகும் இடத்தில் தோலின் நிறம்  மாறிவிடுவதும்  ஒரு முக்கிய  அடையாளமாகும். திசுக்கள் பாதிப்படைந்து ரத்தக்குழாய் சிதைந்து போவதால் தோலின் நிறம் மாறுகிறது.  மேலும் ரத்தக் குழாயிலிருந்து ரத்தம் வெளியேறி அடிபட்ட இடத்தில் தேங்கி, தோலில் நிறமாற்றத்தை உண்டாக்குகிறது. காயம் ஏற்பட்டவுடன்  சிவப்பாக இருக்கும் தோலின் நிறமானது  அந்த இடத்தில் ரத்த ஓட்டம் குறைவதால் கருநீல நிறமாக மாறுகிறது. பிறகு ரத்தக்குழாய்கள்  செயல்பட முடியாத நிலைக்குப்போய்க்  கன்றிப்போன காயம் மஞ்சள் அல்லது பச்சை நிறமாக மாறி, கடைசியில் நீல நிறமாக மாறி விடும். அடிவிழுந்த இடத்தில்தான் தசைகள் கன்றிப்போகும் என்றில்லை. சில நேரங்களில் இணைக்கும் திசுக்கள் மற்றும் தசைகளின் மீது ரத்தம் பரவி அடிபட்ட இடத்துக்கு அப்பாலும் கன்றிப்போனதைப்போல காணப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick