Published:Updated:

பாரம்பர்ய நெல்லில் `அசோக சக்கரம்’ டாம்போ கலையில் அசத்திய கேரள விவசாயி!

நெல் வயலில் `அசோக சக்கரம்' வடிவம்

டாம்போ கலை என்பது ஜப்பானில் தோன்றிய ஒரு கலை வடிவமாகும், அங்கு மக்கள் நெல் வயலில் படங்களை உருவாக்க பல்வேறு வகையான வண்ணங்களில் நெல் நடுவார்கள்.

பாரம்பர்ய நெல்லில் `அசோக சக்கரம்’ டாம்போ கலையில் அசத்திய கேரள விவசாயி!

டாம்போ கலை என்பது ஜப்பானில் தோன்றிய ஒரு கலை வடிவமாகும், அங்கு மக்கள் நெல் வயலில் படங்களை உருவாக்க பல்வேறு வகையான வண்ணங்களில் நெல் நடுவார்கள்.

Published:Updated:
நெல் வயலில் `அசோக சக்கரம்' வடிவம்

கேரளா மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் 58 வயதான விவசாயி  ஜான்சன் ஒலியப்புரம். இவர் திரிசிலேரியில் உள்ள அவரது நிலத்தில் ஜப்பானிய கலையான டாம்போ கலையைப் பயன்படுத்தி அசோக சக்கரம் உருவாக்கியுள்ளார்.

நெல் வயலில் `அசோக சக்கரம்' வடிவம் | டாம்போ கலை
நெல் வயலில் `அசோக சக்கரம்' வடிவம் | டாம்போ கலை

இதற்காக அவர் 4 வகையான நெல் ரகங்களைப் பயன்படுத்தி உள்ளார். இதைக் காண வயநாட்டில் உள்ள திருநெல்லி ஸ்ரீ மகாவிஷ்ணு கோயிலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் முதல் பொதுமக்கள் வரை அவருடைய நிலத்துக்கு வந்து செல்கின்றனர்.

திருநெல்லி வேளாண் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவராக  இருக்கும் ஜான்சன், தனது 20 சென்ட் நிலத்தில் 46 வகையான நெல் ரகங்களைப் பயிரிட்டு வருகிறார். ஆந்திர மாநிலத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த இவர், தன் ஆசிரியர் பணியை விட்டுவிட்டு கடந்த 15 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

பழங்குடி குழந்தைகள் கல்வி கற்கும் விதமாக உண்ணி சதன் எனும் டிரஸ்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2020-21-ம் ஆண்டுக்கான கேரள அரசின் சிறந்த இயற்கை விவசாயி விருதை வாங்கியுள்ளார். கடந்த ஆறு வருடங்களாகத் தன் நிலத்தில் டாம்போ கலையைப் பயன்படுத்தி திருவள்ளுவர் உருவம், பூக்களங்கள், கேரள மாநில வரைபடம், விளக்கு, வண்ணத்துப்பூச்சி , மலர்கள் எனப் பல வடிவங்களை உருவாக்கியுள்ளார்.

நெல் வயலில் தியா வடிவம் | டாம்போ கலை
நெல் வயலில் தியா வடிவம் | டாம்போ கலை

இதுகுறித்து அவர் பேசும்போது, ``இந்த ஆண்டு நாசர் பாத், காலா பாத், காக்கி சாலா மற்றும் ராம்லீ என நான்கு வகையான நெல் விதைகளைப் பயன்படுத்தி அசோக சக்கரத்தின் உருவத்தைச் செய்துள்ளேன். இந்த விதைகள் முளைத்து வரும்போது அவற்றின் நிறமும் மாறிவிடும்.

இவை பழுப்பு நிறத்திலிருந்து தங்கம், வெளிர் பழுப்பு நிறத்திலிருந்து கருப்பு, பச்சை நிறத்திலிருந்து கருப்பு, பச்சை நிறத்திலிருந்து வெள்ளை என நிறங்கள் மாறும் தன்மையுடையவை. இந்த டாம்போ கலை, இத்தகைய நெல் விதைகளை வாங்கவும் பயிரிடவும் மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

திருநெல்லி - திரிசிலேரி சாலையை ஒட்டிய இவரது நிலத்தில் உள்ள அசோக சக்கரத்தின் கலை வடிவம், அந்தப் பகுதியில் உள்ள பலரையும் கவர்ந்திழுக்கிறது. அதோடு, அந்த நெல் வகைகளின் விதைகளைச் சேகரிக்கவும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.