Published:Updated:

விரயமாகும் 900 கனஅடி; ஒரு மாதம் தாண்டியும் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை... கருகும் விதை நெல்கள்!

கவலையில் கடைமடை விவசாயி!

பல ஆண்டுகளாக வாய்க்கால் முறையாக பராமரிக்காததால், நீர் விரயம் நாளொன்றுக்கு 900 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், கீழ்பவானி வாய்க்காலின் வழித்தடத்தின் அருகே தனியார் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கிணறு தோண்டி நீரை உறிஞ்சுவதால், கடைமடைக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.

விரயமாகும் 900 கனஅடி; ஒரு மாதம் தாண்டியும் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை... கருகும் விதை நெல்கள்!

பல ஆண்டுகளாக வாய்க்கால் முறையாக பராமரிக்காததால், நீர் விரயம் நாளொன்றுக்கு 900 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், கீழ்பவானி வாய்க்காலின் வழித்தடத்தின் அருகே தனியார் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கிணறு தோண்டி நீரை உறிஞ்சுவதால், கடைமடைக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.

Published:Updated:
கவலையில் கடைமடை விவசாயி!

திருப்பூர் மாவட்டத்தின் எல்லையில் மங்கலப்பட்டி, மொஞ்சனூர், அஞ்சூர் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தக் கிராமங்களைச் சுற்றி சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

கீழ்பவானி கடைமடை வாய்க்கால்
கீழ்பவானி கடைமடை வாய்க்கால்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வரும் கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர்தான் இப்பகுதியின் முக்கிய பாசனமாகும். இந்த வாய்க்காலில் நஞ்சை பாசனத்துக்காக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்னமும், கடைமடையான மங்கலப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை வந்தடையவில்லை. இதனால், விதை நெல்லைக்கூட விதைக்க முடியாமல் அவை கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது மங்கலப்பட்டி, மொஞ்சனூர், அஞ்சூர் கிராமங்கள். இந்த கிராமங்களைச் சுற்றி சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

கீழ்பவானி வாய்க்கால்
கீழ்பவானி வாய்க்கால்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வரும் கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர்தான் இப்பகுதியின் முக்கிய பாசனமாகும். இந்த வாய்க்காலில் நஞ்சை பாசனத்துக்காக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்னமும், கடைமடையான மங்கலப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளை வந்தடையவில்லை. இதனால், விதை நெல்லைக்கூட விதைக்க முடியாமல் அவை கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எம்.வி.சண்முகராஜ்
எம்.வி.சண்முகராஜ்

இதுகுறித்து, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் எம்.வி.சண்முகராஜ் கூறுகையில், கீழ்பவானி வாய்க்கால் மூலம் மொத்தம் 2 லட்சத்து 7,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்காலில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 15 வரை சுமார் 1,03,500 ஏக்கர் நஞ்சை விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும்.

இந்த ஆண்டும் நஞ்சை பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் 15-ம் தேதியே தண்ணீர் திறந்துவிடப்பட்டும் இதுவரை மங்கலப்பட்டி, மொஞ்சனூர், அஞ்சூர் பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை.

1956-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த வாய்க்காலில், 1 கனஅடி தண்ணீர் மூலம் சுமார் 60 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 1,725 கன அடி தண்ணீர் இருந்தாலே 1 லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இருப்பினும், இந்த வாய்க்காலில் நாளொன்றுக்கு சுமார் 600 கன அடி தண்ணீர் விரயமாகும் எனக் கணக்கிடப்பட்டு, அதை ஈடுகட்ட 2,300 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

Canal
Canal

ஆனால், பல ஆண்டுகளாக வாய்க்கால் முறையாகப் பராமரிக்காததால், நீர் விரயம் நாளொன்றுக்கு 900 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், கீழ்பவானி வாய்க்காலின் வழித்தடத்தின் அருகே தனியார் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கிணறு தோண்டி நீரை உறிஞ்சுவதால், கடைமடைக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.

இந்த முறை கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, ஒரு மாதத்துக்கும் மேலாகியும் மங்கலப்பட்டி, மொஞ்சனூர், அஞ்சூர் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேராததால், விதை நெல்லைக்கூட விதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார். இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுகுறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.