Published:Updated:

தேங்காய் சிரட்டையில் சமையலறைப் பொருள்கள்; திண்டுக்கல் இளைஞரின் அசத்தல் கைவினைத் தொழில்!

தேங்காய் சிரட்டையில் கரண்டிகள்

``ரச கரண்டி, வதக்கும் கரண்டி, மசாலா கரண்டி, மல்டி பர்போஸ் கரண்டி, ஸ்பூன், ஃபோர்க் மற்றும் கிண்ணம், அஞ்சறைப்பெட்டியை போல ஏழறைப் பெட்டி, தேநீர் பருக கப் அண்ட் சாஸர், பெயர்ப் பலகை, கி செயின் போன்றவற்றை செய்துள்ளேன்.'' - மதுமலரன்

தேங்காய் சிரட்டையில் சமையலறைப் பொருள்கள்; திண்டுக்கல் இளைஞரின் அசத்தல் கைவினைத் தொழில்!

``ரச கரண்டி, வதக்கும் கரண்டி, மசாலா கரண்டி, மல்டி பர்போஸ் கரண்டி, ஸ்பூன், ஃபோர்க் மற்றும் கிண்ணம், அஞ்சறைப்பெட்டியை போல ஏழறைப் பெட்டி, தேநீர் பருக கப் அண்ட் சாஸர், பெயர்ப் பலகை, கி செயின் போன்றவற்றை செய்துள்ளேன்.'' - மதுமலரன்

Published:Updated:
தேங்காய் சிரட்டையில் கரண்டிகள்

வேகமான நம்முடைய வாழ்க்கை ஓட்டத்தில், நாம் உபயோகிக்கும் பொருள்கள் நாம் கையாளும் வசதிக்கு ஏற்ப உள்ளதா என்பதை மட்டுமே பார்க்கிறோம். அந்தப் பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதைப் பற்றி நாம் யோசிப்பதில்லை. ஆனால், தான் உற்பத்தி செய்யும் பொருள் சூழலுக்கு எந்தப் பாதிப்பையும் கொடுக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு தேங்காய் சிரட்டையில் சமைக்கத் தேவையான பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், வத்திப்பட்டி பகுதியில் வசிக்கும் மதுமலரன்.

 மதுமலரன்
மதுமலரன்

இதுகுறித்து அவரிடம் பேசினோம். ``எனக்குப் பல வேலைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளது. கட்டட வேலை, கலம்காரி ஆடை விற்பனை, நண்பரின் சிறுதானிய விற்பனை, காப்பீடு நிறுவன வேலை எனப் பல துறைகளில் பணிபுரிந்துள்ளேன். 2016-ம் ஆண்டிலிருந்துதான் இந்த தேங்காய் சிரட்டை வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். எனக்குத் தென்னந்தோப்பு உள்ளது. அங்கே கிடந்த சிரட்டையில் சிறியதாக பூ ஒன்றைச் செய்து பார்த்தேன்.

அது நன்றாக உள்ளதென என் தோழி கூறவே, சில, பல முயற்சிகளுக்குப் பிறகு, இதைத் தொழிலாகவே செய்ய முடிவெடுத்து ஆரம்பித்துவிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்றுமே கேரளா, இலங்கை, வியட்நாம் போன்ற நாடுகளில் இயற்கை சார்ந்த பொருள்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. குறிப்பாக, சில கிராமங்களில் தேங்காய் சிரட்டைப் பயன்பாடு உள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் தேங்காய் சிரட்டையில் ஒரு பொருளைச் செய்து விற்கும்போது அதை வாங்குபவர்கள், `இதையெல்லம் முன்ன பார்த்தது, அப்புறம் காணாமலே போயிருச்சு. இப்போ நீங்க இதைச் செய்றது ஆச்சர்யமா இருக்கு' என்று சொல்லி வாங்கிச் செல்லும்போது, பாரம்பர்யத்தை மீட்டெடுத்த நிறைவும் மகிழ்வும் கிடைக்கும். தொழிலாக மட்டுமல்லாமல் கலையாகவும் இதைச் செய்வது இரட்டை திருப்தி'' என்றவர், தான் சிரட்டையில் உருவாக்கும் பொருள்களைப் பற்றிச் சொன்னார்.

தேங்காய் சிரட்டையினா ஆன ஏழறை பெட்டி
தேங்காய் சிரட்டையினா ஆன ஏழறை பெட்டி

பெரும்பாலும் வீட்டு உபயோகத்துக்குத் தேவையான பொருள்களையே தயாரிக்கிறேன். எட்டு வகையான கரண்டிகள், ரச கரண்டி, வதக்கும் கரண்டி, மசாலா கரண்டி, மல்டி பர்போஸ் கரண்டி, ஸ்பூன், ஃபோர்க் மற்றும் கிண்ணம், அஞ்சறைப் பெட்டியைப்போல ஏழறைப் பெட்டி, தேநீர் பருக கப் அண்ட் சாஸர், பெயர்ப் பலகை, கி செயின் போன்றவற்றைச் செய்துள்ளேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேங்காய் சிரட்டையில் முக வடிவங்களையும் செதுக்கிக் கொடுத்துள்ளேன். மேலும், ஃபின்லாந்தில் வசிக்கும் ஒரு தமிழர் கேட்டதன் பெயரில், தமிழ் எழுத்துகளைச் செய்து, அவர் பிள்ளைகளுக்காக அனுப்பினேன். இந்தத் தொழிலில், முதலீடு மற்றும் இதர செலவுகள் எல்லாம் போக ஓர் ஆண்டுக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் வரை லாபம் எடுக்கலாம்'' என்றார்.

கரண்டிகள்
கரண்டிகள்

``தேங்காய் சிரட்டையில் செய்யும் பொருள்களை 100, 120 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தினாலும் ஒன்றும் ஆகாது. பயன்படுத்தி பழுதான இந்தப் பொருள்களைத் தூக்கிப் போட்டாலும் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதைக் கழுவ சோப் தேவையில்லை, சாம்பல், தேங்காய் நாரில் சுத்தப்படுத்தலாம்'' என்றார்.

பூமியைப் பாழ்படுத்தாத பாரம்பர்ய பொருள்களையும் பழக்கத்தையும் வளர்த்தெடுக்கும் மதுமலரனுக்கு வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism