Published:Updated:

சிறப்பான வருமானம் கொடுக்கும் சிவப்புப் பலா! - 10 மரங்கள் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம்

 டிராகன் ஃப்ரூட் தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
டிராகன் ஃப்ரூட் தோட்டம்

வழிகாட்டும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்!

வ்வொரு பழமும் ஒரு சுவையைக் கொண்டிருக்கிறது. மா, பலா, வாழை, கொய்யா, பப்பாளி என நாம் அறிந்த பழங்களுக்கு அப்பாற்பட்டும் சில பழங்கள் சந்தையில் இருக்கின்றன. சமீபகாலமாகப் பிரபலமான பழங்களாக வலம் வருகின்றன டிராகன் ஃப்ரூட் மற்றும் சிவப்புப் பலா. இந்தப் பழங்களைச் சாகுபடி செய்யும் தொழில்நுட்பத்தையும் பயிற்சியையும் வழங்கிவருகிறது கர்நாடக மாநிலம் ஹிர்ரஅள்ளியிலுள்ள இந்தியத் தோட்டக்கலைப் பரிசோதனை மையம். பெங்களூரு-தும்கூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் இந்த மையத்தின் தலைவராக இருப்பவர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானி கருணாகரன். டிராகன் ஃப்ரூட், சிவப்புப் பலாவைப் பரவலாக்குவதில் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிவருகிறார். மையத்தில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.

சித்து பலாச்சுளைகள்
சித்து பலாச்சுளைகள்

“இந்தப் பண்ணை 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பப்பாளி, பட்டர் ஃப்ரூட், டிராகன் ஃப்ரூட் கன்றுகளை நேரடியாக விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறோம். விவசாயிகளுக்கும் பழப் பயிர்கள் குறித்து நேரடியாக விளக்கம் அளிக்கிறோம். அதிகச் சத்தும் சுவையுமுள்ள காய்கறிப் பழங்களைத்தான் உலகமே எதிர்பார்க்கிறது. குறிப்பாகக் காய்கறி, பழங்களில்தான் நமக்குத் தேவையான சத்துகள் அதிகம் கிடைக்கின்றன. அதற்காகத்தான் அடுத்த 2021-ம் ஆண்டை ‘சர்வதேசக் காய்கறி மற்றும் பழங்களுக்கான ஆண்டா’க அறிவித்திருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை. ஆனாலும் டிராகன் ஃப்ரூட் பற்றி மக்களுக்கு அதிகம் தெரியவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பலாப்பழம்
பலாப்பழம்

இது சப்பாத்திக் கள்ளி (Cactaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் சுக்ரோஸ் அளவு குறைவாக இருப்பதால் சர்க்கரைநோயாளிகளும் இதைச் சாப்பிடலாம். அதோடு பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், ஜிங்க் அதிக அளவு வைட்டமின்கள், பீட்டாலின் கலோரி, கரோட்டினாய்டு அதிக அளவில் உள்ளன. உடலில் ரத்த அணுக்களை மேம்படுத்தும் தாதுக்கள் இந்தப் பழத்தில் உள்ளன. அதனால் மருத்துவர்கள் இதைச் சாப்பிடப் பரிந்துரைக்கிறார்கள். இத்தனை சத்துகளுள்ள இந்தப் பழத்தை இந்திய மக்கள்தொகையில் 5-10 சதவிகித மக்கள்தான் சாப்பிடுகிறார்கள். தற்போது சூப்பர் மார்க்கெட்களில் அதிகம் கிடைக்கிறது. இலங்கை, வியட்நாம், தாய்லாந்திலிருந்துதான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் அது சுவையில் இந்தியாவில் விளையும் டிராகன் பழங்களுக்கு இணையாக இல்லை.

இந்த ரகத்தின் பெயர் சித்து. இது ஒரு விவசாயியின் பெயர். சித்து பலாப்பழ மரம் வைத்திருக்கும் விவசாயி இன்று கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தாய்லாந்து நாட்டில் இதைச் சிறப்பாகச் சாகுபடி செய்கிறார்கள். அங்கு சென்று சாகுபடி நுட்பங்களை ஆராய்ந்துவந்தோம். சந்தை விலை, மருத்துவப் பயன்பாடு, இந்திய காலநிலையில் எளிதாக வளரும் தன்மை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இதன் சாகுபடி நுட்பங்களைப் பரவலாக்கிவருகிறோம். இதைச் சாகுபடி செய்வதற்கான ஆரம்பகட்டச் செலவு 3 முதல் 5 லட்சம் ரூபாய். அடுத்தடுத்த ஆண்டுகளில் செலவு குறைந்துவிடும். வாரம் ஒரு முறை தண்ணீர் கொடுத்தால் போதும்.

டிராகன் ஃப்ரூட்
டிராகன் ஃப்ரூட்

முதல் ஆண்டில் ஒரு டன், 2-ம் ஆண்டில் 2.5 டன், 3-ம் ஆண்டில் 3-4 டன் என்ற அளவில் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ஒரு ஏக்கருக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது’’ என்றவர், “தற்போதுதான் இதற்கான சந்தை வளர்ந்துவருகிறது. அதனால் சந்தையைத் தெரிந்துகொள்ளாமல் சாகுபடியில் இறங்க வேண்டாம். வெப்பநிலை 40 டிகிரிக்குக் கீழேயுள்ள பகுதிகளில் இதைச் சாகுபடி செய்யலாம். தற்போது கர்நாடக, ஆந்திர, குஜராத், மகாராஷ்டிர மாநில விவசாயிகள் டிராகன் பழத்தைச் சாகுபடி செய்கிறார்கள். தமிழ்நாட்டில் சேலம், கோயம்புத்தூர், மலைப் பகுதிகள் டிராகன் பழச் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளன” என்றவர் சிவப்புப் பலா பற்றிய தகவலுக்குள் புகுந்தார்.

முனைவர் கருணாகரன்
முனைவர் கருணாகரன்

“பொதுவாக, பலா 10 கிலோவுக்கு மேல் எடைகொண்டது. இப்போது இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் மூலமாகப் பரவலாக்கப்பட்டுவரும் சிவப்புப் பலாவின் எடை மூன்று முதல் நான்கு கிலோதான். இதுவரை மஞ்சள், பழுப்பு நிறத்திலிருந்த பலாச் சுளைகளைத்தான் பார்த்திருப்பீர்கள். இந்தப் பழத்தின் சுளைகள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் (காப்பர் ரெட்) இருக்கும். இந்த ரகத்தின் பெயர் சித்து. இது ஒரு விவசாயியின் பெயர். 2014-ம் ஆண்டு தும்கூர் மாவட்டம், செலூரு கிராமத்திலுள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில் என் தலைமையிலான குழுவினரால் இது கண்டுபிடிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகள் இந்தப் பலாப்பழத்தைக் கொண்டு சென்று பரவலாக்க விரும்பின. ஆனால், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், `இதை நாமே விவசாயிகளிடம் பரவலாக்குவோம்’ என்று சொல்லிவிட்டது. இந்தப் பொறுப்பை பெங்களூருவிலுள்ள இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சிக் கழகத்திடம் ஒப்படைத்தது. இதுவரை ஒரு லட்சம் கன்றுகளை விற்பனை செய்திருக்கிறோம். இதுவும் ஒரு பாரம்பர்ய ரகம்தான். இந்தப் பழத்திலுள்ள ‘லைகோபின்’ சத்து உடலுக்கு நன்மை செய்யக்கூடியது. தக்காளியில் இந்த ‘லைகோபின்’ அளவு ஐந்து சதவிகிதம் உள்ளது. இதில் இரண்டரை சதவிகிதம் உள்ளது. இது விவசாயி கண்டுபிடித்த ரகம் என்பதால் விற்பனைத் தொகையில் 75 சதவிகிதத்தை அவருக்கு ராயல்டியாகக் கொடுத்துவிடுகிறோம்.

டிராகன் ஃப்ரூட் தோட்டம்
டிராகன் ஃப்ரூட் தோட்டம்

இந்தப் பழத்தின் கன்றுகள் 35 ஆண்டுகள் வயதுடைய மரத்திலிருந்து உருவாக்கப்படுகின்றன. தற்போது இந்தப் பழம் சூப்பர் மார்க்கெட்களில் 500 ரூபாய் விலைக்கு விற்கப்படுகிறது. விவசாயிகள் ஒரு பழத்தை 250-300 ரூபாய் விலையில் விற்க வாய்ப்பிருக்கிறது. இந்தப் பலா, நடவு செய்த 4-ம் ஆண்டிலிருந்து மகசூல் கொடுக்கும். ஆரம்பத்தில் குறைவான மகசூல் கிடைத்தாலும், சுமார் 20 ஆண்டுகள் ஆன ஒரு மரத்திலிருந்து 100 பழங்களுக்கு மேல் கிடைக்கும். 10 மரங்கள் வைத்திருந்தால்கூட ஒரு மரத்துக்குக் குறைந்தபட்சம் 100 பழங்கள் என்ற கணக்கில் ஆண்டுக்கு 3,00,000 ரூபாய் வருமானம் பார்த்துவிட முடியும். பலாவுக்கு பெரிய அளவில் பராமரிப்பு தேவைப்படாது. தமிழ்நாட்டில் பலா நன்கு விளையும் புதுக்கோட்டை, பண்ருட்டி பகுதிகளில் நன்றாக வளரும். இது அனைத்து சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடிய தன்மை வாய்ந்தது. கடலோரப் பகுதிகளில் சாகுபடி செய்வோர் மட்டும் நன்கு விசாரித்துவிட்டுச் சாகுபடியில் இறங்க வேண்டும்’’ என்றவர் நிறைவாக,

சிறப்பான வருமானம் கொடுக்கும் சிவப்புப் பலா! - 10 மரங்கள் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம்

‘‘சித்து பலாப்பழ மரத்தை வைத்திருந்த விவசாயி இன்று கோடீஸ்வரர் ஆகிவிட்டார். அதேபோல பட்டர் ஃப்ரூட் சாகுபடி தொடர்பான தகவல்களும் இந்த மையத்தில் கிடைக்கும். ஆர்வமுள்ள விவசாயிகள் மையத்தைத் தொடர்புகொள்ளலாம். கன்றுகள், தொழில்நுட்பங்கள் தேவைப்படுவோர் ஹிர்ரஅள்ளியிலுள்ள எங்கள் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடர்புகொள்ளலாம். பொதுவாக வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பழப் பயிர்களைத்தான் விவசாயிகளைப் பயிர் செய்யச் சொல்லி அறிவுறுத்துகிறோம். நன்கு வருமானம் கொடுக்கும் தோட்டக்கலைப் பயிர்களை, தமிழ்நாட்டு விவசாயிகள் சாகுபடி செய்ய முன்வர வேண்டும். கன்றுகள் தேவைப்படுவோர் என் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பி முன்பதிவு செய்துகொள்ளவும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புக்கு, முனைவர் கருணாகரன், தொலைபேசி: 0816 2243214, செல்போன்: 94832 33804. மின்னஞ்சல்: chesh.iihr@icar.gov.in