நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பயிர்களுக்குக் குளியல் தண்ணீர்!

தொடக்க நாள் நிகழ்வில்
பிரீமியம் ஸ்டோரி
News
தொடக்க நாள் நிகழ்வில்

நாட்டுநடப்பு

ழிவுகளை மேலாண்மை செய்யும் நிறுவனங்கள், அமைப்புகள் இணைந்து நடத்திய `வேஸ்ட் மற்றும் எனர்ஜி எக்ஸ்போ’ சென்னையில் டிசம்பர் 20-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. கழிவுகளை மட்க வைக்கும் தொட்டிகள், கழிவுகளிலிருந்து கேஸ் தயாரிக்கும் அமைப்புகள் உள்ளிட்டவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

பொன்ராஜ், திருப்பதி
பொன்ராஜ், திருப்பதி

தொடக்க நாள் நிகழ்வில் பேசிய அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி பொன்ராஜ் வெள்ளைச்சாமி, “கழிவுகள் இன்று மிகப்பெரிய சவாலாக உருவாகியுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் வேறு வரவிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மூலம் ஊரகப் பகுதிகளில் குப்பை மேலாண்மைக்காக 32,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12,000 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. அவற்றில் சிமென்ட் ரோடு போடப்பட்டுள்ளதே தவிர எந்த கிராமத்திலும் முறையாகக் குப்பைகள் அகற்றப்படவில்லை. அதேபோலக் கழிவறைகளும் எந்த கிராமத்திலும் செயல்பட வில்லை. இவ்வளவு தொழில்நுட்பங்கள் இருந்தும் ஊரகப் பகுதிகளில் குப்பைகளை மேலாண்மை செய்ய முடியவில்லை. சொல்லப்போனால் ஊரக, நகர மேம்பாட்டுக்காகத் தான் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது” என்றார்.

சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மதுசூதனரெட்டி ஐ.ஏ.எஸ்., “சென்னையில் ஒருநாளைக்கு 550 மெட்ரிக் டன் குப்பை வெளியேற்றப் படுகிறது. கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக் கூடங்கள் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டவை. மிகப்பெரிய குப்பைகளை எரிக்கும் இடங்களாக இருக்கின்றன. அந்த இடங்களில் விரைவில் குப்பைகளிலிருந்து கேஸ் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன” என்றார்.

ஈகோ டூரிஸம் சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் ஸ்டீவ் போர்ஜியா, “கழிவு மேலாண்மைத்துறையில் கண்டுபிடிப்புகளின் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. எல்லோரும் மாநகரம், நகரங்களை ஒட்டிய பகுதிகளில் ரிசார்ட்களை அமைக்கிறார்கள்.

தொடக்க நாள் நிகழ்வில்
தொடக்க நாள் நிகழ்வில்

நான் ஊரகப் பகுதிகளில்தான் அமைத்துவருகிறேன். அதேபோல், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பாத்திரம் கழுவவும் குளிக்கவும் பயோ சோப், நீம் சோப், சோற்றுக்கற்றாழை சோப் போன்றவை தற்போது அதிகம் கிடைக்கின்றன. ரசாயனக் கலப்பு இல்லாத இவற்றைப் பயன்படுத்தும்போது, அந்தத் தண்ணீரை வயலுக்கும் தோட்டத்துக்கும் தாராளமாகப் பயன்படுத்தலாம். பயிர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. தண்ணீரையும் சுத்திகரித்ததுபோல் இருக்கும்” என்றார்.

ஹோட்டல் கழிவு மறுசுழற்சி திட்டத்தின் தலைவர் கே.திருப்பதி, “ஹோட்டல்களில் உணவுத் தயாரிப்பின்போது கிடைக்கும் காய்கறிக் கழிவுகள், மீதமான உணவுகளை மறுசுழற்சி செய்து உரமாகவும் இயற்கை விவசாயத்துக்கும் பயன்படுத்தி வருகிறோம். இந்த நல்ல திட்டத்தில் அனைத்து ஹோட்டல்களும் இணைந்து செயல்பட முன்வர வேண்டும்” என்றார்.

ஜெ.லெவின்