Published:Updated:

ஊடுபயிரில் உன்னத வருமானம் கொடுக்கும் சின்ன வெங்காயம்!

அறுவடை செய்த வெங்காயத்துடன் சுரேஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடை செய்த வெங்காயத்துடன் சுரேஷ்குமார்

40 சென்ட்... ரூ. 50,000

ஊடுபயிரில் உன்னத வருமானம் கொடுக்கும் சின்ன வெங்காயம்!

40 சென்ட்... ரூ. 50,000

Published:Updated:
அறுவடை செய்த வெங்காயத்துடன் சுரேஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடை செய்த வெங்காயத்துடன் சுரேஷ்குமார்

மகசூல்

“ ‘வாழை... வாழவும் வைக்கும் தாழவும் வைக்கும்’ என்று சொல்வார்கள். 10 முதல் 12 மாதங்கள் காத்திருந்து வாழை அறுவடையில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை ஊடுபயிராக விதைக்கும் சின்ன வெங்காயத்தின் மூலம் பெறுவது மகிழ்ச்சிதான்” என்கிறார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுரேஷ்குமார்.

திருநெல்வேலி மாவட்டம், பொட்டல்புதூரிலிருந்து 2 கி.மீ தொலைவிலிருக்கிறது காவூர். அங்கிருக்கும் தோட்டத்தில் அறுவடை செய்த சின்ன வெங்காயத்தின் ஒரு பகுதியை நிழலில் கிளறிவிட்டுக்கொண்டிருந்த சுரேஷ்குமாரைச் சந்தித்தோம். உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ‘‘பி.காம் படிச்சு முடிச்சதும் பைக் கன்சல்டிங் பிசினஸ் ஆரம்பிச்சேன். கூடவே விவசாயமும் செய்யலாம்னு நினைச்சேன். இயல்பாகவே எனக்கு இயற்கைமேல அதிக ஆர்வம் உண்டு.

வாழையில் ஊடுபயிராக அகத்தி, துவரை
வாழையில் ஊடுபயிராக அகத்தி, துவரை

அதனால, `ரசாயன உரம் எதுவும் கலக்காம, மட்கிய மாட்டுச்சாணத்தை மட்டும் பயன்படுத்தி இயற்கை முறையில சாகுபடி செய்யணும்’னு நினைச்சேன். தொழில் மூலமா கிடைச்ச வருமானம், பூர்வீக நிலத்தை வித்ததன் மூலமா கிடைச்ச பணம் ரெண்டையும் சேர்த்து இந்த 9 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். இது செம்மண் கலந்த களிமண் நிலம். வாங்கும்போது, சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்து புதர் மாதிரி இருந்தது. அதைச் சீர்படுத்தி மண்ணை வளப்படுத்துறதுக்கே ஒரு வருஷம் ஆகிடுச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறுவடை செய்த வெங்காயத்துடன் சுரேஷ்குமார்
அறுவடை செய்த வெங்காயத்துடன் சுரேஷ்குமார்

நான் ஆனந்த விகடனோட வாசகர். தொடர்ந்து வாசிச்சுட்டு வர்றேன். கூடவே ‘பசுமை விகடன்’ இதழையும் வாங்கிப் படிச்சேன். அதன் மூலமா இயற்கை விவசாயத்தைப் பத்தின புரிதல் ஓரளவுக்குக் கிடைச்சது. தொடர்ந்து வாசிக்க ஆரம்பிச்சேன். மகசூல் கட்டுரைகள்ல வர்ற விவசாயிகளின் சாகுபடி குறிப்புகள் எனக்கு பயனுள்ளதா இருந்துச்சு.

ஒரு தாருக்கு 150 முதல் 200 ரூபாய் வரை விலை கிடைக்கும். வெங்காயத்தை உள்ளூர் வியாபாரிகளுக்கே விற்பனை செஞ்சுட்டேன்.

தஞ்சாவூர் மாவட்டத்துல ஒரு விவசாயியின், ‘ஜீரோ பட்ஜெட்’ நாட்டுக் கத்திரிச் சாகுபடி கட்டுரை என்னை ரொம்பவே ஈர்த்தது. உடனே அந்த விவசாயியைத் தொடர்புகொண்டு சந்தேகங்கள் கேட்டேன். அடுத்த பட்டத்திலேயே கத்திரிச் சாகுபடி செஞ்சேன். தொடர்ந்து, நெல், வெங்காயம், எலுமிச்சைச் சாகுபடி செஞ்சேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்போ, மொத்தம் 9 ஏக்கர் நிலத்துல நாலு ஏக்கர்ல எலுமிச்சை, ஒரு ஏக்கர்ல தென்னை இருக்கு. ஒன்றரை ஏக்கர் மானாவாரி நிலம், ரெண்டு ஏக்கர்ல பாரம்பர்ய நெல் சாகுபடிக்காக உழவு செஞ்சிருக்கேன். 40 சென்ட் நிலத்துல வாழைக்கு ஊடுபயிராகச் சின்ன வெங்காயம், அகத்தி, துவரை நடவு செஞ்சேன். இதுல சின்ன வெங்காயம் அறுவடை முடிஞ்சது” என்றவர் வருமானம் குறித்துப் பேசினார்.

இயற்கை இடுபொருள்
இயற்கை இடுபொருள்

“40 சென்டில் சக்கை, ரஸ்தாலி, ஏத்தன்னு மூணுவிதமான வாழை ரகத்தை நடவு செஞ்சிருக்கேன். 300 வாழைமரங்கள் இருக்கு. வாழைக்கு ஊடுபயிராக நடவு செஞ்ச சின்ன வெங்காயத்துல 1,218 கிலோ மகசூல் கிடைச்சது.

வீட்டுத் தேவைக்காக 100 கிலோ வெங்காயத்தை வெச்சுக்கிட்டு, 1,118 கிலோவை விற்பனை செஞ்சுட்டேன். கிலோ 46 ரூபாய்க்கு விற்பனையானது. 1,118 கிலோ வெங்காய விற்பனை மூலம் 51,428 ரூபாய் வருமானமாகக் கிடைச்சது. இதுவரைக்கும் மொத்தச் செலவு 16,450 ரூபாய். அதுபோக 34,978 ரூபாய் லாபம்தான்.

இந்தச் செலவுகள் சின்ன வெங்காயத்துக்கானது மட்டுமல்ல. வாழைக்கும் சேர்த்துதான். இனி, அடுத்தடுத்து அகத்தி, துவரை, வாழையை அறுவடை செய்யலாம். அகத்தியை ஆடு, மாடுகளுக்குத் தீவனமாகவும் தரலாம், கீரையாகவும் விற்பனை செய்யலாம். வெங்காய அறுவடைக்குப் பிறகு வாழையில் முழு கவனம் செலுத்தினால் 9-வது மாசம் குலை தள்ளி, 12-வது மாசம் அறுவடை செய்யலாம். வாழையிலும் நல்ல மகசூல் கிடைக்கும். இப்போ இருக்குற 300 வாழையில 250 தார்கள் தரமானதாகக் கிடைக்கும். ஒரு தாருக்கு 150 முதல் 200 ரூபாய் வரை விலை கிடைக்கும். சராசரியா 150 ரூபாய்னு வெச்சுகிட்டாலும், 37,500 ரூபாய் கிடைக்கும். இந்த வருமானத்துக்கு நடவு செஞ்சதிலிருந்து 12 மாசம் காத்திருக்கணும். ஆனா, அதுக்குச் சமமான வருமானத்தை 70 நாள்கள்லயே வெங்காயம் கொடுத்திடுது. வெங்காயத்தை உள்ளூர் வியாபாரிகளுக்கே விற்பனை செய்துட்டேன். இயற்கை முறைச் சாகுபடி வெங்காயம்கிறதுக்காகக் கூடுதலாக விலை கிடைக்கிறதில்லை. இருந்தாலும், `நஞ்சில்லாத பொருளை விற்பனை செய்யறோம்’கிற ஆத்ம திருப்தி கிடைக்கும். அது எனக்குப் போதும்” என்றவர் கைநிறைய வெங்காயத்தை அள்ளிக் காட்டி மகிழ்கிறார்.

தொடர்புக்கு, சுரேஷ்குமார், செல்போன்: 98653 80007.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

வெங்காயச் சாகுபடி பற்றி சுரேஷ்குமார் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

ஊடுபயிரில் உன்னத வருமானம் கொடுக்கும் சின்ன வெங்காயம்!

வாழைச் சாகுபடிக்கு வைகாசிப் பட்டம் சிறந்தது. சித்திரையில் உழவுப்பணியை மேற்கொள்ள வேண்டும். 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு உழவு செய்ய வேண்டும். இரண்டடி அகலத்தில், அரையடி இடைவெளியில் மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். வரிசைக்கு வரிசை எட்டடி, குழிக்குக் குழி எட்டடி இடைவெளியில் ஒரு அடி ஆழத்தில் குழி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் பீஜாமிர்தத்தில் விதைநேர்த்தி செய்யப்பட்ட விதை வெங்காயத்தை நடவு செய்ய வேண்டும்.

விதை வெங்காயம் ஒரு கிலோ எடையில் இருக்க வேண்டும். அன்றே பாத்தியின் ஓர் ஓரத்தில் ஐந்து விரல் இடைவெளியில் துவரை, மற்றொரு ஓரத்தில் அகத்தி விதைகளை ஊன்றிவிட்டுத் தண்ணீர்ப் பாய்ச்சலாம். பாசனம் செய்த ஈரத்தில், வாழை நடவு செய்த குழியின் நடுவில், சின்ன வெங்காய விதையை ஊன்ற வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்துவர வேண்டும். பிளாஸ்டிக் தாள் விரித்து 100 கிலோ காய்ந்த எருவைக் கொட்டி, அதன்மீது 20 லிட்டர் ஜீவாமிர்தத்தைத் தெளித்து சிமென்ட் கலவைபோலக் குழையவைக்க வேண்டும். அதை 48 மணி நேரம் வரை காயவைத்து, விதைத்த முதல் நாளில், பாத்திகளில் பரவலாகத் தூவ வேண்டும்.

40 சென்ட் நிலத்துக்கு 330 விதை வெங்காயங்கள் (300 விதை வெங்காயங்கள் போதும். இருந்தாலும் பழுது நடவுக்காக 30 வெங்காயங்களைக் கூடுதலாக வாங்க வேண்டும்), 250 கிலோ விதை வெங்காயம், ஒரு கிலோ அகத்தி விதை, இரண்டு கிலோ துவரை விதை தேவைப்படும். விதை வெங்காயத்தை 20 லிட்டர் பீஜாமிர்தத்தில் முக்கி எடுத்து அரை மணி நேரம் வரை நிழலில் உலர்த்திப் பிறகு நடவு செய்யலாம். இப்படி விதைநேர்த்தி செய்வதால் வேர் தொடர்பான நோய்கள் ஏற்படாது. வெங்காயத்தின் வேர்ப்பகுதி கீழேயும் தலைப்பகுதி மேலேயும் இருக்கும்படி, முக்கால்வாசி மண்ணுக்குள் புதைந்து கால்வாசி மட்டும் வெளியில் தெரியும்படியாகவும் ஊன்ற வேண்டும். ஊடுபயிர்கள் ஐந்து முதல் ஏழாவது நாளில் முளைப்பு தெரியும்.

10-ம் நாள், 50 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனநீரில் கலந்துவிட வேண்டும். தொடர்ந்து வாரம் ஒருமுறை இதேபோல ஜீவாமிர்தம் கொடுத்து வர வேண்டும். ஏழாவது வாரம் 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் தேமோர்கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 15 மற்றும் 30-ம் நாள் களை எடுக்க வேண்டும். களை எடுத்த பிறகு, ஜீவாமிர்தத்தில் செறிவூட்டப்பட்ட மட்கிய எருவைத் தூவ வேண்டும்.

தேவைப்பட்டால் 45-ம் நாளில் மூன்றாவது களை எடுக்க வேண்டும். இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் இதுவரை எந்தப் பூச்சி, நோய்த் தாக்குதலும் இல்லை. 55 முதல் 60-ம் நாளுக்கு மேல் வெங்காயம் முற்றத் தொடங்கும். 65-70-ம் நாளுக்குள் அறுவடை செய்யலாம். வெங்காயத்தாள்கள் முற்றிப் பழுத்துக் காணப்படும். அந்த நேரத்தில் மண்ணிலிருந்து வெங்காயத்தை எடுத்துப் பார்த்தால் இளஞ்சிவப்பு நிறத்தில் திரட்சியாக இருந்தால், அறுவடைக்குத் தயாராகிவிட்டதைத் தெரிந்துகொள்ளலாம். அறுவடை செய்த வெங்காயத்தை, நிலத்திலேயே ஒரு வாரம் வரை காயவைத்த பிறகு பிரித்தெடுக்கலாம். ரசாயன முறையில் சாகுபடி செய்து, அறுவடை செய்த வெங்காயம் இரண்டு மாதங்களுக்கு மேல் தாங்காது. ஆனால், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வெங்காயத்தை ஆறு மாதங்கள் வரை இருப்புவைத்து விற்பனை செய்யலாம்.

நாமே விதை சேகரிக்கலாம்!

றுவடை செய்த வெங்காயத்தில் திரட்சியானவற்றைத் தேர்வு செய்து விதைக்காகச் சேமித்து வைக்க வேண்டும். இவை விதை வெங்காயமாக மாற இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும். 100 கிலோ வெங்காயத்தை விதைக்காகச் சேமித்தால் விதைப்பு நேரத்தில் அதிலிருந்து 70 முதல் 80 கிலோ வெங்காயம் மட்டுமே கிடைக்கும். எனவே, விதைக்காக வைக்கும்போது, தேவைப்படும் அளவைவிட, 20 சதவிகிதம் கூடுதலாக எடுத்துச் சேமிக்க வேண்டும்.