Published:Updated:

‘பசுமை’ தந்த பயிற்சி! - ‘அவள்’ கொடுத்த விருது!

விருதுடன் தமிழ்ச்செல்வி
பிரீமியம் ஸ்டோரி
விருதுடன் தமிழ்ச்செல்வி

விருது

‘பசுமை’ தந்த பயிற்சி! - ‘அவள்’ கொடுத்த விருது!

விருது

Published:Updated:
விருதுடன் தமிழ்ச்செல்வி
பிரீமியம் ஸ்டோரி
விருதுடன் தமிழ்ச்செல்வி

ல்வேறு துறைகளில் சாதனை படைத்து, சிறந்து விளங்கும் பெண்களுக்கு விகடன் குழுமத்தின் அங்கமான அவள் விகடன் சார்பில் ‘அவள் விருதுகள்’ கடந்த 2017-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. நான்காம் ஆண்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 15-ம் தேதி, சென்னையிலுள்ள ஃபெதர்ஸ் ராதா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘பசுமைப் பெண்’ பிரிவில் சிறந்த பெண்ணாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார் ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள கொண்டையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயப் பெண்மணி தமிழ்ச்செல்வி.

அவள் விருதுகள்
அவள் விருதுகள்

பல்வேறு துறை சார்ந்தவர்கள் இருந்த அரங்கில் விவசாயத்துக்காகக் கொடுக்கப்பட்ட இந்த விருது பார்வையாளர்களின் புருவத்தை உயர்த்தியது.

தமிழ்ச்செல்விக்கு திரைப்பட நடிகைகள் சீதா, ரம்யா பாண்டியன் ஆகியோர் விருது வழங்கினர். விருது பெற்றுக்கொண்ட பிறகு பேசிய தமிழ்ச்செல்வி, “கண்களில் ஆயிரம் கனவுகள் சுமந்தும், காலம் கனியும் எனக் காத்திருந்து ஏமாந்தும், துன்பச் சகதியில் துவண்டு விழுந்தும் தலைநிமிர்ந்து போராடிக்கொண்டிருக்கும் விவசாயப் பெண்கள் சார்பாக வணக்கம்” என்று எழுச்சிக் கவிதை வாசிக்க அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து பேசியவர், “பல மருத்துவர்களைப் பார்த்த மேடை இது. தலைவலி வந்தால் டாக்டர்கிட்ட போய் மருந்து வாங்கிச் சாப்பிடுறோம். வயிற்றுவலி போன்ற நோய்களுக்கு மருத்துவரிடம் போறோம். எப்போதாவதுதான் தலைவலி, வயிற்றுவலி வரும். ஆனா, ஒரு நாளைக்கு மூன்று முறை வரும் தீராத நோய் பசி. நான் அதுக்கு மருந்து கொடுக்குறவ... என்னை `மருத்துவர்’னு நீங்க ஏத்துக்குறீங்களா...’’ என்று பார்வையாளர்களைப் பார்த்துக் கேட்டவர்,

‘பசுமை’ தந்த பயிற்சி! - ‘அவள்’ கொடுத்த விருது!

“விவசாயத்துல போதிய வருமானம் இல்லாம இருந்துச்சு. 2014-ம் வருஷம் பசுமை விகடன் புத்தகத்துல `தண்டோரா’ பகுதியில மைராடா வேளாண் அறிவியல் மையத்துல காளான் வளர்ப்புப் பயிற்சி கொடுக்கப்போறதா அறிவிப்பு வந்திருந்துச்சு. முறைப்படி காளான் வளர்ப்பைக் கத்துக்கலாம்னு அந்தப் பயிற்சியில கலந்துக்கிட்டேன். காளான் பத்தின விஷயங்களை முழுமையாகத் தெரிஞ்சுக்கிட்டு காளான் வளர்ப்புல இறங்கினேன்.

‘‘விளையவெக்கிற விவசாயிகளுக்கும் விலை கிடைக்கலை. அதை வாங்கிச் சாப்பிடுறவங்களும் வாங்க முடியலை. அதை மாற்றத்தான் என் தோட்டத்தில விளையுற எல்லாத்தையும் மதிப்புக்கூட்டி நேரடியா விற்பனை செய்யறேன்.’’

அன்னிக்கு பசுமை விகடன் காட்டிய பாதையால இன்னிக்கு அவள் விருதுகள் மேடையில நிக்கிறேன். எல்லாருக்கும் இருக்கும் 24 மணி நேரம்தான் எனக்கும் இருக்கு. அதில் 20 மணி நேரம் உழைப்பும் முயற்சியும் மட்டுமே. நான்கு மணி நேரம் மட்டும்தான் உறக்கத்துக்குத் தர்றேன். அவள் விகடன் இன்று கொடுத்திருக்கும் விருதை எனக்கு மட்டுமல்ல... என்னைப் போன்ற எத்தனையோ விவசாயப் பெண்மணிகளுக்குக் கொடுத்த விருதாகப் பார்க்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரெண்டு மாசத்துக்கு முன்னால வெங்காய விலை 200 ரூபாய். `விவசாயிக்கு என்ன கொறைச்சல்’னு நீங்க நினைச்சிருப்பீங்க. ஆனா, எங்களுக்கு அன்னைக்குக் கிடைச்சது வெறும் 53 ரூபாய்தான். விளையவெக்கிற எங்களுக்கும் விலை கிடைக்கலை. அதை வாங்கிச் சாப்பிடுற உங்களாலயும் வாங்க முடியலை. அதிக விலையால லாபம் அடையுறது இடைத்தரகர்கள் மட்டும்தான். அதை மாற்றத்தான் என் தோட்டத்துல விளையுற எல்லாத்தையும் மதிப்புக்கூட்டி நேரடியா கொண்டு போய் விற்பனை செஞ்சுட்டு வர்றேன்.

விருதுடன் தமிழ்ச்செல்வி
விருதுடன் தமிழ்ச்செல்வி

எல்லாரும், `விவசாயம் தோற்றுப்போயிடும்; விவசாயி தோற்றுப்போவான்’னு சொல்றாங்க. ஆனா, மனுஷனுக்குப் பசி இருக்குற வரைக்கும் விவசாயமும் விவசாயியும் வாழ்வான். உங்க எல்லாருக்கும் ஒரு கோரிக்கைவெக்கிறேன். உங்க குழந்தைகளை மாசம் ஒரு முறை பக்கத்துல இருக்குற தோட்டத்துக்குக் கூட்டிட்டுப் போங்க. விவசாயத்தைப் பத்திச் சொல்லிக் கொடுங்க” என்று ஒரேமூச்சில் பேசியபடி தமிழ்ச்செல்வி விசிலடிக்க... மீண்டும் கைத்தட்டல்களால் அதிர்ந்தது அரங்கம்.

‘பசுமை’ தந்த பயிற்சி! - ‘அவள்’ கொடுத்த விருது!

முன்னதாக நடிகை சீதா பேசும்போது, “எனக்குச் சின்ன வயசுல இருந்தே தோட்டம் வைக்கணும்னு ரொம்ப ஆசை. நடிச்சுக்கிட்டிருக்கும்போது அதிக வேலை காரணமா என்னால மாடித்தோட்டம் அமைக்க முடியலை. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி மாடித்தோட்டம் அமைச்சேன். இப்போ அதை நல்லபடியா பாதுகாத்துக்கிட்டு வர்றேன். எல்லாரும் அதைச் செய்யணும்னு நினைக்கிறேன்” என்றார்.

நடிகை ரம்யா பாண்டியன் பேசும்போது, “நானும் வீட்டு மொட்டை மாடியில தோட்டம் அமைச்சிருக்கேன். அதுல இருந்து காய்கறிகள், கீரைகள்னு கொஞ்சம் கிடைக்கும். அதை என்னோட வீட்டுக்குப் பயன்படுத்துறேன். எல்லாரும் அவங்கவங்க வீட்ல மாடித்தோட்டம் அமைக்கணும். குறைஞ்சபட்சம் கீரையாவது பயிர் செய்யுங்க. நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்” என்றார், மகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism