Published:Updated:

கஜா... காலம் செய்த கடும்பிழை! #MyVikatan

தென்னந்தோப்பு போனாலே தேகமெல்லாம் தீயாச்சே..!

Gaja cyclone disaster
Gaja cyclone disaster

வீட்டைச் சுத்தி நின்ன

வேப்ப மரம் விழுந்திடுச்சே..

மனசெல்லாம் பூத்திருந்த

மாமரமும் மறைஞ்சிடுச்சே...

ஆசையாய் வளர்த்து வந்த

அத்தனையும் போயிடுச்சே..!

ஊரே சுடுகாடாய்

உருக்குலைஞ்சு போயிடுச்சே..!

உடம்புக்குள்ளே உசிரை வைச்சு

உலவுறோமே நடைபிணமாய்..!

#Gaja
#Gaja

தென்னந்தோப்பு போனாலே

தேகமெல்லாம் தீயாச்சே..!

எளநீர் செதறிக் கிடந்ததிலே

எங்க இதயம் வெடிச்சதங்கே..!

கண்ணீரை துடைச்சு விட

கைவிரல்கள் இல்லை அங்கே..!

எங்க கண்ணீரை

நாங்களே அள்ளி அள்ளி

எங்க கண்ணீரைக்

கழுவி நின்னோம்..!

ஓடியாடி விளையாண்ட

ஒரு அணிலும் காணலையே..!

உற்சாகக் குரல் கொடுக்கும்

ஒரு குருவி மிஞ்சலையே..!

மனசெல்லாம் நிரப்பி வைச்ச

வாழ்க்கை இங்கே போயிடுச்சே..!

மனசொடிஞ்சு போய் இங்கே

மந்தையிலே நிக்கிறோமே!

மனு மேலே மனுப் போட்டும்

இன்னும் மாற்றம் வந்து சேரலையே..!

விட்ட விதி இதுதானோ..?

வீதியிலே கெடக்கிறோமே..!

கஜா பாதிப்பு
கஜா பாதிப்பு

எங்க கனவுக்கு பூசிவைச்ச

கலரெல்லாம் கரைஞ்சிடுச்சே..

கால் வயித்து கஞ்சிக்கு

கஷ்டம் என்ன தெரிஞ்சிடுச்சே..

குடிக்க தண்ணீ இல்லை...

குத்த வைக்க வீடும் இல்லை

எங்க வயித்துப் பசி போக்க

எந்த வண்டி வந்து நிக்கும் ..?

ஏக்கமா பார்த்து நின்னோம்..

எங்க ஊரு ரோடு மேலே கண்ண வைச்சி..!

பேசி வைச்ச

கல்யாணப் பேச்செல்லாம்

காலாவதி ஆயிடுச்சே..!

வறுமை மட்டும் இங்கே

வாழ்க்கைத் துணை ஆயிடுச்சே..!

ஒடைஞ்ச குடிசையை

ஒட்டவைச்சு உட்கார

தார்ப்பாய் கிடைக்குமானு

தவமாய் தவம் கிடந்தோம்..!

நினைச்சாலே தீப்பிடிக்கும்

எங்க நெஞ்சமெல்லாம் கருகி நிக்கும்..!

கஜா தாண்டவம்
கஜா தாண்டவம்

கடிச்சுக் குதறிப்புட்டு

கஜா மிருகம்

கரையேறிப் போயிடுச்சு..!

கரைசேர முடியாம

இன்னும் நாங்க கண்ணீரில் தவிக்கிறோமே.!

காலமே மறுபடியும்

இந்தக் கடும் பிழையைச் செய்யாதே...

ஒட்டுமொத்த பூமிக்கும்

இந்த ஒரு கஷ்டம் போதும் ஐயா..!

பட்டபாடு எல்லாமும்

எங்க பரம்பரைக்கே போதுமய்யா..!

- பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/