Published:Updated:

92 வீடுகள், தினமும் 60 கிலோ... காய்கறிக் கழிவு மேலாண்மையில் அசத்தும் குடும்பப் பெண்கள்!

கழிவுகளை மேலாண்மை செய்யும் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழிவுகளை மேலாண்மை செய்யும் பெண்கள்

கழிவு மேலாண்மை

92 வீடுகள், தினமும் 60 கிலோ... காய்கறிக் கழிவு மேலாண்மையில் அசத்தும் குடும்பப் பெண்கள்!

கழிவு மேலாண்மை

Published:Updated:
கழிவுகளை மேலாண்மை செய்யும் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழிவுகளை மேலாண்மை செய்யும் பெண்கள்

“எங்க குடியிருப்பில் குப்பையைப் பார்க்கவே முடியாது. அதே மாதிரி எங்க குடியிருப்பை விட்டு குப்பையும் வெளியே போகாது. அந்தக் கழிவுகளை உரமாக்கி நாங்களே பயன்படுத்திக்கிறோம்” என்று தங்களைத் தாங்களே சிலாகித்துக்கொள்கிறார்கள் சென்னை ஆதம்பாக்கம், ஆண்டாள் நகர், ஜெயின் சாஸ்வத் குடியிருப்பிலிருக்கும் பெண்கள்.

கழிவுகளை மட்கவைக்கும் தொட்டி
கழிவுகளை மட்கவைக்கும் தொட்டி

இந்தப் பெண்கள் ஒன்றிணைந்து ‘கிரீன் கமிட்டி’ என்ற பெயரில் 10 பேர்கொண்ட குழுவாக திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை முன்னெடுத்துவருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஒரு நாளைக்கு 60 கிலோ கழிவுகள் மூலமா 10 நாள்களுக்கு ஒரு முறை 15 கிலோ உரத்தை எடுக்கிறோம். இந்த ஒரு வருஷத்துல 15 டன் உரம் கிடைச்சிருக்கு.’’

கமிட்டியின் உறுப்பினர் பாரதி ராமகிருஷ்ணனிடம் பேசினோம். “ `ஒவ்வொரு குடியிருப்பும் கழிவுகளை, தானே மேலாண்மை செய்துகொள்ள வேண்டும்’ என்று அரசு விதிமுறை கொண்டு வந்திருக்கு. இந்த விதிமுறை 2016-ம் ஆண்டு முதல் நடைமுறையில இருக்கு. ஆனா, யாரும் அதைச் சரியாகப் பின்பற்றுவதில்லை.

காய்கறிகளை உடைத்து சிறிதாக்குதல்
காய்கறிகளை உடைத்து சிறிதாக்குதல்

இந்தப் பகுதியிலிருந்து அனுப்பப்படும் குப்பைகள்தான் அருகிலுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஒட்டியிருக்கும் பெருங்குடி குப்பைக் கிடங்குக்குப் போகுது. அங்கே எரிக்கப்படுற குப்பைகளின் துர்நாற்றம் மறுபடியும் இந்தப் பகுதியிலிருக்கும் காத்துலதான் கலக்குது. அது எங்களுக்கே ஒரு மாதிரியாக இருந்தது. `நாம ஏன் குப்பையை இங்கேயே மட்கவெக்கக் கூடாது?’னு தோணிச்சு. அந்த யோசனையின் விளைவுதான் எங்கள் குடியிருப்பின் பின்பகுதியில இருக்குற மட்கவைக்கும் தொட்டியோடுகூடிய உரமாக்கும் கூடம்” என்று அறிமுகம் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து பேசினார் கிரீன் கமிட்டியின் மற்றோர் உறுப்பினரான நாச்சாள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கழிவுகளை மேலாண்மை செய்யும் பெண்கள்
கழிவுகளை மேலாண்மை செய்யும் பெண்கள்

“வீட்டுக் கழிவுகளை மட்கவெச்சு உரமாக்கணும்னு முடிவெடுத்தவுடனேயே பல்லாவரத்துல இருக்கும் ஜெயின்ஸ் அப்பார்ட்மென்ட், ரமணி அப்பார்ட் மென்ட்கள்ல செயல்படுத்திவரும் முறைகளைப் பார்வையிட்டோம். அதுல பெங்களூருல இருந்து கொண்டுவந்த டைஜஸ்டர் மாடல் எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே எங்க குடியிருப்பு உறுப்பினர்கள்கிட்ட பேசி இந்த மட்கவைக்கும் தொட்டியை அமைக்க அனுமதி வாங்கினோம். 2018, ஜூன் மாசம் 1,500 கிலோ கொள்ளளவுகொண்ட இந்தத் தொட்டியை சுமார் 60,000 ரூபாய்க்கு பெங்களூருல இருக்கும் சுப் லாப் என்ற நிறுவனத்தில் வாங்கினோம்.

கழிவுகள்மீது பயோ கிளீன் பவுடர் தூவுதல்
கழிவுகள்மீது பயோ கிளீன் பவுடர் தூவுதல்

வாங்கினதும், தொட்டிக்குன்னு கொஞ்சம் இடம் ஒதுக்கி, மழையில நனையாதபடி ஒரு ஷெட் அமைச்சோம். தொட்டி, ஷெட்டெல்லாம் அமைக்க ஒன்றரை லட்ச ரூபாய் ஆச்சு. குடியிருப்பில் வேலை செய்யும் பெண்களையே இந்த வேலைகளுக்கும் நியமிச்சோம். இந்தக் கழிவுகளைத் தரம்பிரிச்சு, பயோ கிளீன் பவுடரைச் சேர்த்து கழிவுகளை மட்கவெக்கணும். இதைச் செய்யறதுக்கு ஒரு ஆளை நியமிச்சிருக்கோம்” என்றவரைத் தொடர்ந்து பேசினார்கள் கமிட்டி உறுப்பினர்கள் மது மற்றும் வைஜயந்தி,

இரண்டையும் நன்றாகக் கலக்குதல்
இரண்டையும் நன்றாகக் கலக்குதல்

“ஒவ்வொரு வீட்டுக்கும் நான்கு குப்பைக்கூடைகள், ஒரு பை இருக்கும். பச்சைத் தொட்டியில் மட்கும் குப்பைகளையும், சிவப்புக் கூடையில் மட்காத பொருள்களையும், பையில் உணவுக் கழிவுகளையும் சேகரிப்போம். வீட்டில் வேலை செய்ய வர்றவங்க குப்பைகளைத் தரம்பிரிக்க முதல்ல ரொம்ப தயக்கம் காட்டினாங்க. காரணம் குப்பைகளை ஒரே கூடையிலேயே போடுறதுதான் அவங்களுக்கு எளிதானது.

92 வீடுகள், தினமும் 60 கிலோ... காய்கறிக் கழிவு மேலாண்மையில் அசத்தும் குடும்பப் பெண்கள்!

தரம் பிரிக்கணும்னு சொன்னதும் அதைக் கூடுதல் சுமையா நினைச்சாங்க. இப்போ அவங்களே புரிஞ்சுகிட்டாங்க. வீட்டுல கணவரும் பிள்ளைகளும்கூட இந்த வேலையில இணைஞ்சுட்டாங்க. பூக்கள், வாழை இலைகள் கிடைக்கும்போது கூடுதல் குப்பை கிடைக்குது. முட்டை ஓடுகள், இறைச்சி எலும்புகளை குப்பையோடு சேர்த்து மட்கவெக்கிறோம். மீதமான சாதம் போன்ற உணவுக் கழிவுகளையும் இதோடு மட்கவெச்சிடுறோம். இப்போ `ஜீரோ வேஸ்ட்’ என்பதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்” என்றார்கள்.

92 வீடுகள், தினமும் 60 கிலோ... காய்கறிக் கழிவு மேலாண்மையில் அசத்தும் குடும்பப் பெண்கள்!

நிறைவாகப் பேசிய பாரதி, “இங்கே காய்கறி, பழக்கழிவுதான் வீடுகள்ல இருந்து கிடைக்கிற முக்கியமான கழிவு. குப்பைகளை மட்கவெச்சு கிடைக்கும் உரத்தை எடுத்து, குடியிருப்பைச் சுற்றியுள்ள செடிகள், மரங்களுக்குப் பயன்படுத்திக்கிறோம்.

மட்கவைக்கும் தொட்டியில் கழிவுகளை நிரப்புதல்
மட்கவைக்கும் தொட்டியில் கழிவுகளை நிரப்புதல்

கழிவுகளை மட்கவெக்கிறதுக்கும் பயன்படுத்திக்கிறோம். மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் வெச்சிருக்கிறவங்களுக்கு ஒரு கிலோ மட்கிய இயற்கை உரத்தை 20 ரூபாய்க்கு விக்கிறோம். இந்தக் கழிவுகளை மட்கவெக்கிற வேலைகளுக்குக் குடியிருப்புல வேலை செய்யறவங்க ஏழு பேர் சேர்ந்து ஒரு நாள்ல ஒரு மணி நேரத்துல முடிச்சிடுறாங்க. ஒரு நாளைக்கு 60 கிலோ கழிவுகள் மூலமா 10 நாள்களுக்கு ஒரு முறை 15 கிலோ உரத்தை எடுக்கிறோம். இந்த ஒரு வருஷத்துல 15 டன் உரம் கிடைச்சிருக்கு. எங்க குடியிருப்புல இருக்கிற தோட்டங்களுக்குப் பயன்படுத்தினது போக மீதியை வித்துடுவோம். இதுக்காக தொழிலாளர்களுக்கு மாசத்துக்கு 10,000 ரூபாய் செலவாகுது. உரத்தை வித்தா இந்தச் செலவை ஓரளவுக்கு ஈடுகட்டலாம். ஆனா, இதை லாப நோக்கத்துல நாங்க நடத்தலை. நம்மாலும் கழிவுகள மேலாண்மை செய்ய முடியும்கிறதுதான் எங்களோட நோக்கம். சுற்றுச்சூழலுக்கும் கழிவு மேலாண்மைக்கும் எங்களால ஆன ஒரு பங்களிப்பை அளிச்சிருக்கோம்” என்கிறார் உற்சாகமாக.

அந்தப் பெண்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.

தொடர்புக்கு, பாரதி ராமகிருஷ்ணன், செல்போன்: 96000 40704.

மட்கவைக்கும் டிரம்!

ரு நாளைக்கு ஐந்து கிலோ காய்கறி, உணவுக் கழிவுகளை வெளியேற்றும் வீடுகளுக்கு ஏற்ப பிரத்யேக மட்கவைக்கும் டிரம்களைப் பயன்படுத்தலாம். மேற்சொன்ன முறையில் கழிவுகளோடு, பயோ கிளீன் பவுடரைச் சேர்த்து துளைகளுள்ள டிரம்முக்குள் இட வேண்டும். கழிவுகள் மட்க மட்க, அடிப்பகுதியிலிருக்கும் அமைப்பைத் திறந்து உரத்தை எடுத்துக் கொள்ளலாம். டிரம்மை வைக்க அடிப்பகுதியில் இரும்பாலான ஸ்டாண்டு வைக்கப்பட்டிருக்கும். ஒன்றிரண்டு வீடுகளுள்ள இடங்களுக்கு மிகவும் ஏற்றது. இதை நாமே 2,000 ரூபாய் செலவில் உருவாக்கிக்கொள்ளலாம்.

மட்கவைக்கும் முறை

காய்கறிக் கழிவுகளை மட்கவைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் ஸோபியா, “வீடுகள்ல கழிவுகளை மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள்னு பிரிச்சுவெச்சிடுவாங்க. நாங்க மட்கும் குப்பைகளை மட்டும் 10 கிலோ கொள்ளளவுகொண்ட பக்கெட்களில் எடுத்துட்டு வந்திடுவோம். அதை ஒரு தார்பாலின் ஷீட்ல கொட்டி உடையாத காய்கறிகள், பழங்களைத் தனியாப் பிரிச்சு உடைச்சு மீண்டும் கழிவுகளோடு சேர்த்திடுவோம்.

10 கிலோ காய்கறிக் கழிவுகளோடு ஒரு கிலோ பயோ கிளீன் பவுடர் (தேங்காய்நார்க் கழிவு, இ.எம் கரைசல் கலந்தது) என்ற அளவுல நன்றாகக் கலந்து, மீண்டும் பக்கெட்களில் நிரப்பி மட்கும் தொட்டியில நிரப்பணும். ஒரு முறை கழிவுகளை நிரப்பின பிறகு மீண்டும் பயோ கிளீன் பவுடரைத் தூவிவிடணும்.

இப்படி ஒரு நாள் நிரப்பிட்டா, 45 நாள்கள்ல தரமான இயற்கை உரம் தயாராகிடும். அதைத் தொட்டியின் அடிப்பகுதியைத் திறந்து எடுத்துக்கலாம். உரத்தை ஜல்லடையில சலிச்சு, டிரம்மில் கொட்டிவெச்சிடுவோம். தேவைப்படும்போது தோட்டத்துல உள்ள செடிகளுக்கும் விற்பனைக்கும் பயன்படுத்துவோம்” என்கிறார்.

தரம் பிரித்தால் குப்பைகளைக் குறைக்கலாம்!

ந்தக் குடியிருப்பில் காய்கறிக் கழிவுகளை மட்கவைக்கும் தொழில்நுட்பம் குறித்து வழிகாட்டிவருகிறது `நம்ம ஊரு ஃபவுண்டேஷன்’ அமைப்பு. இதன் தலைவர் நடராஜனிடம் பேசினோம். “காய்கறி, உணவுக் கழிவுகளை மட்கவைப்பது எளிமையான தொழில்நுட்பம். இந்தக் கழிவுகளை மட்கவைத்தாலே 60 சதவிகித வீட்டுக் குப்பைகள் குறைந்துவிடும். `வீட்டிலுள்ள எலெக்ட்ரானிக், பிளாஸ்டிக் குப்பைகளை அந்தந்த நிறுவனங்களே வாங்கிக்கொள்ள வேண்டும்’ என்பது சட்டம். ஆனால், நிறுவனங்கள் வாங்குவதில்லை. இது குறித்த சட்ட விவரங்களும் மக்களுக்குத் தெரிவதில்லை. குப்பைகளை மட்கவைப்பது ஏதோ பெரிய விஷயம் என்று நினைக்கிறோம். அது மிகவும் எளிதானது. குப்பைகளைத் தரம் பிரிப்பது பாதிக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்குச் சமம்” என்றார்.

நடராஜன், சீனிவாசன்
நடராஜன், சீனிவாசன்

பெரும்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கம், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் கூட்டியக்கத்தின் தலைவர் சீனிவாசன், “ `100 கிலோ கழிவுகளை வெளியேற்றும் குடியிருப்புகள், 5,000 சதுரஅடிக்கு மேலுள்ள குடியிருப்புகள் வெளியேற்றும் திடக்கழிவுகளை குடியிருப்புக்குள்ளேயே மட்கவைக்க வேண்டும்’ என்பது அரசின் விதிமுறை. ஆனால், இன்னும் பல குடியிருப்புகள் அதைத் தொடங்கவேயில்லை. அதற்கு நம் மனநிலைதான் காரணம். இன்னொன்று, அரசு அமைப்புகளே வார்டு, ஊராட்சிவாரியாக ஒரு மட்கும் அமைப்பைத் தொடங்கி, அந்தந்தப் பகுதிகளிலேயே குப்பையை மட்கவைத்து உரமாக்கிட வேண்டும். எல்லாவற்றையும் கொண்டு போய் ஓரிடத்தில் சேகரித்து, குப்பையை எரிப்பது தேவையில்லாத மனித உழைப்பையும், சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கொண்டுவருகிறது” என்று ஆதங்கப்பட்டார்.