Published:Updated:

விளைச்சல் இருந்தும் விலையில்லை; கண்ணீர் வடிக்கும் சாமந்திப்பூ விவசாயிகள்!

சாமந்திப்பூ

இந்த ஆண்டு கடைமடை வாய்க்காலுக்கு சரியான முறையில் தண்ணீர் வராததால் குறுவை சாகுபடியை இழந்தவர்கள் மாற்றுப் பயிராக சாமந்திப் பூ விவசாயம் செய்தனர். சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயத்துக்கு மாற்றுப் பயிராக சாமந்திப்பூ விவசாயம் செய்து வருகின்றனர் விவசாயிகள்.

விளைச்சல் இருந்தும் விலையில்லை; கண்ணீர் வடிக்கும் சாமந்திப்பூ விவசாயிகள்!

இந்த ஆண்டு கடைமடை வாய்க்காலுக்கு சரியான முறையில் தண்ணீர் வராததால் குறுவை சாகுபடியை இழந்தவர்கள் மாற்றுப் பயிராக சாமந்திப் பூ விவசாயம் செய்தனர். சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயத்துக்கு மாற்றுப் பயிராக சாமந்திப்பூ விவசாயம் செய்து வருகின்றனர் விவசாயிகள்.

Published:Updated:
சாமந்திப்பூ

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடத்தில் சாமந்திப்பூ விளைச்சல் அதிகமாக இருந்தும், உரிய விலையில்லாத காரணத்தால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி தண்டேசநல்லூர், அனுமந்தபுரம், நல்லூர், ஆச்சாள்புரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயத்துக்கு மாற்றுப் பயிராக சாமந்திப்பூ விவசாயம் செய்து வருகின்றனர் விவசாயிகள்.

சாமந்திப்பூ
சாமந்திப்பூ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகத்தில் சாமந்திப்பூ கோயில்களில் சுவாமிகளை அலங்கரிப்பதற்கும், மனிதர்களின் இறப்புக்கும் சாமந்திப்பூ மாலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கண்ட கிராமங்களில் விளைவிக்கப்படும் சாமந்திப்பூ கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சில மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தோட்டக்கலைத்துறை மூலமாக முழுவதும் மானியத்தில் வழங்கப்படும் விதையை வாங்கி விவசாயிகள் சாமந்திப்பூ பதிய வைத்து பயிரிட்டு வந்தனர். தற்போது பயிரிட்டுள்ள பூச்செடிகளுக்கு இது அறுவடைக்காலம். ஆனால், சாமந்திப்பூ என்றழைக்கப்படுகிற செண்டு பூவுக்கு இந்த ஆண்டு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் சிலரிடம் பேசினோம்.

``இந்த ஆண்டு கடைமடை வாய்க்காலுக்கு சரியான முறையில் தண்ணீர் வராததால் குறுவைச் சாகுபடியை இழந்த நாங்கள்  மாற்றுப் பயிராக சாமந்திப்பூ விவசாயம் செய்தோம். இந்த விவசாயத்துக்கும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதால் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு பூச்செடிகளை வளர்த்தோம். சாமந்திப்பூ கடந்த ஆண்டுகளில் ஒரு கிலோ 40 ரூபாய் வரை விலை போனது. கடந்த வாரம் வரை 10 ரூபாய்க்குத்தான் வாங்கினார்கள். தற்போது 25 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஆனாலும், இந்த விலை போதாது. இதனால் செலவு செய்த தொகையைக்கூட எடுக்க முடியவில்லை.

செண்டுமல்லி
செண்டுமல்லி

கடந்த ஆண்டுகளில் அரசு மானியத்தில் சாமந்திப்பூ விதைகளை வழங்கினார்கள். ஆனால், இந்தாண்டு மானியத்தில் அதிகாரிகள் வழங்கவில்லை. எனவே, உடனடியாக எங்களுடை விவசாய நிலங்களை வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, மானியத்துடன் விதைகளை வழங்கிட வேண்டும். இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட சாமந்திப்பூ விவசாயிகளான எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்" என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

இது குறித்து இந்தப் பகுதி தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் செல்வராஜிடம் பேசினோம். ``சாமந்திப்பூ விவசாயிகளின் நிலைமை குறித்தும், பூக்களின் விலை வீழ்ச்சி குறித்தும், தோட்டக்கலை துறை துணை இயக்குநரிடம் தெரிவித்துள்ளோம். இந்த வருடம் ஆடிப்பட்டத்துக்குரிய காய்கறி விதைகள்கூட இன்னும் வரவில்லை. அதுபோல் சாமந்திப்பூ விதைகள் வரவில்லை. இவை வந்தவுடன் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவோம்" என்றார்.