Published:Updated:

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4-ல் ஜெயிக்கலாம் ஈஸியா! - மொழி காட்டும் வழி

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4-ல் ஜெயிக்கலாம் ஈஸியா! - மொழி காட்டும் வழி
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4-ல் ஜெயிக்கலாம் ஈஸியா! - மொழி காட்டும் வழி

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4-ல் ஜெயிக்கலாம் ஈஸியா! - மொழி காட்டும் வழி

Day 2. மொழி காட்டும் வழி

அரசுப் பணிகளுக்காக, பல்வேறு போட்டித் தேர்வுகள் நடைபெறுகின்றன. இவை அனைத்திலும் மிக எளிமையானது – சந்தேகத்துக்கு இடமில்லாமல், குரூப்-4 தேர்வுதான். ஊக்கப்படுத்துவதற்கோ, உற்சாகம் கொடுப்பதற்கோ, இப்படிச் சொல்லவில்லை. உண்மையே இதுதான். பத்தாம் வகுப்பு அளவில்தான் கேள்விகள் வரும் என்பதனால் மட்டுமல்ல; அநேகமாக, தேர்வுக்கான பாடத் திட்டம் (’சிலபஸ்’) மொத்தமும் தந்து, அதில் இருந்தே பெரும்பாலான கேள்விகள் கேட்பது, ’டி.என்.பி.எஸ்.சி.’ தேர்வுகளில் மட்டுமே தென்படுகிற அதிசயம்.  மற்ற பல போட்டித் தேர்வுகளில், ‘சிலபஸ்’ என்று தரவே மாட்டார்கள். நாம்தான் ‘கண்டதையும்’ படித்துக்கொண்டு போக வேண்டும். 

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4-ல் ஜெயிக்கலாம் ஈஸியா! - மொழி காட்டும் வழி

எதில் இருந்து எது மாதிரியான கேள்வி வரும் என்பதே தெரியாமல், தேர்வுக்குத் தயார் ஆவது எப்படி….? இதுதான் ‘சிலபஸ்’; இங்கிருந்துதான் கணிசமான கேள்விகள் வரும் என்று தெரிந்து தயார் செய்வது எப்படி….? 

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு, இரண்டாம் வகையைச் சேர்ந்தது. யாருக்கெல்லாம், குரூப் 4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்கு செல்ல வேண்டும் என்று தீராத ஆசை இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் செய்ய வேண்டிய முதல் முக்கிய பணி – (வழிமுறை -3) உடனடியாக, tnpsc.gov.in என்கிற அதிகாரபூர்வ இணைய தளம் மூலம், குரூப்-4 தேர்வுக்கான பாடத்திட்டத்தை பதிவிறக்கம் (download) செய்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.  இதை செய்து முடிக்க சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் ஆகவே ஆகாது.  இதில் ஏதும் பிரச்னை இருந்தால், ‘வெப் சென்டர்’ போனால், அவர்களே, பதிவிறக்கம் செய்து, ‘ப்ரிண்ட்-அவுட்’ தந்து விடுவார்கள். 

ஒவ்வொருவரும் தனித்தனியே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. நண்பர்கள் / உறவினர்கள் குழுவாக சேர்ந்து, ஒரு நகல் (copy) வைத்து இருந்தாலும் போதும். தேவைப்படும்போது, ‘refer’ செய்துகொள்ளலாம். இந்தப் பாடத் திட்டத்தில் தந்துள்ள பகுதிகளை முதலில் படித்து முடித்துவிட வேண்டும். எல்லாம் ஏற்கெனவே பள்ளி நாள்களில் நாம் படித்ததுதான். எனவே, யாருடைய சிறப்பு வழிகாட்டுதலும் தேவைப்படாது. 

இரண்டு பிரச்னைகள் வரலாம். ஒன்று, பாடப் புத்தகங்கள் கிடைப்பது. எந்தப் புத்தகத்தையும் காசு கொடுத்து வாங்க வேண்டியது இல்லை. நம் உற்றார், உறவினர், அண்டை, அயலார் வீட்டில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் இருக்கிறார்கள்தானே….? அவர்களிடம் இருந்து ஓரிரு நாள்களுக்கு, புத்தகங்களை இரவல் பெற்று, அப்போதைக்கு அப்போதே படித்து முடித்து, உடனடியாகத் திருப்பித் தந்து விடுவோம். 

ஒரு சந்தேகம் எழுகிறது. எந்தப் பாடத் திட்டத்தில் படிக்க வேண்டும்…? அதாவது, சமச்சீர் கல்விப் பாடங்களா…? ’சென்ட்ரல் போர்ட்’டின் NCERT புத்தகங்களா….?  பதிவிறக்கம் செய்த பாடத் திட்டத்தைப் பார்ப்போம். அதில் உள்ள பகுதிகள் எந்தப் புத்தகத்தில் உள்ளதோ, அதை வாங்கிப் படிப்போம். பொதுவாக, சமச்சீர் கல்விப் புத்தகங்கள்தாம், தமிழ் மொழித் தாளுக்குப் பயன்படும். ஆங்கிலம் தேர்வு செய்தவர்களுக்கு, NCERT புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கும். 

பொதுப் பாடப் பிரிவைப் பொறுத்த மட்டில், இந்தப் பிரச்னை பெரிதாக எழ வாய்ப்பு இல்லை. காரணம், இவை எல்லாம், அறிவுசால் பாடங்கள். அதாவது, சூத்திரம் (formula), தேற்றம் (theory) வாய்ப்பாடுகள் (tables) வரைபடங்கள் (maps) ஆகியவற்றின் அடிப்படையில் விடை அளிக்க வேண்டிய பகுதிகள். இவை எல்லாம் பிரபஞ்ச பாடங்கள். (universal subjects) எல்லாப் பாடத் திட்டங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மாறவே போவதில்லை. அறிவியல், கணிதம் மட்டுமல்ல; சரித்திரம், பூகோளம் உட்பட எல்லாப் பாடங்களும் இப்படித்தான். 

எந்தப் பாடத் திட்டமாக இருந்தாலும், 1947 ஆகஸ்ட் 15 அன்றுதானே, இந்தியா சுதந்திரம் பெற்று இருக்கும்…? தமிழ்நாட்டுக்கு வடக்கேதானே டெல்லி இருக்க முடியும்…? என்ன தெரிகிறது….? மொழிப் பாடங்களும் ’அறிவு’ பாடங்களும், முற்றிலும் வேறுவேறு வகையைச் சேர்ந்தவை. இந்த வேறுபாட்டை நாம் நன்கு உணர்ந்தால்தான், இவற்றை எவ்வாறு படிக்க வேண்டும் என்பதில் நமக்கே ஒரு தெளிவு பிறக்கும். 

சரி… எப்படி படிக்கலாம்….? 

மொழிப் பாடங்களைப் படிக்கிறபோது, படிக்கிறபோதே நமக்கு விளங்கி விடும். ஞாபகம் வைத்துக்கொள்வதும்கூட, கடினமாக இருக்காது. இதுவே, பிற பாடங்களைப் படிக்கிறபோது, கருத்துரு (concept) பிடிபட வேண்டும். அப்போதுதான் அடுத்த படிக்குச் செல்ல முடியும். இதுதான் நமது தயாரிப்பில் மிக முக்கியம். பள்ளித் தேர்வுகளின்போது எப்படியோ ‘குருட்டாம் போக்கில்’ (மன்னிக்கவும்) நினைவில் கொண்டு எழுதிவிட்டு வந்து இருப்போம். போட்டித் தேர்வுகளில் இந்த அணுகுமுறை சரி வராது. இங்கே ஆனால், ‘கான்செப்ட்’ புரிந்துகொண்டு படித்தால்தான், தேர்வில் எளிதாக, சரியாக விடை அளிக்க முடியும். இதில் நாம் முழுக் கவனத்துடன் இருக்க வேண்டும். 

‘கான்செப்ட்’ மட்டும் சரியாப் புரிந்து… சரியாப் பிடிச்சுட்டாப் போதும்… ‘பின்னி எடுத்துடலாம்’. 

இந்தப் பகுதிக்கு, பிறகு வருவோம். இப்போது நாம் காண இருப்பது – நம் தாய்மொழி – தமிழ்!

(முயல்வோம்)

2. எளிமையோ எளிமை.

2016 / 2014-ம் ஆண்டு, குரூப் 4 தேர்வில் வந்த சில கேள்விகள்:

TNPSC Group IV ஜெயிக்கலாம் ஈசியா!

நாள் பாடம்
Day 1

க்ரூப் 4 தேர்வுக்கு எப்படி தயாராவது? + Model Exam 1  [Click Here]

Day 2

மொழிப் பாடங்களை எப்படி படிக்கலாம்? + Model Exam 2 [Click Here]

Day 3

சரியான விடை.. பொருத்தமான விடை.. எப்படி பதிலளிப்பது? + Model Exam 3 [Click Here]

Day 4

ஊரைத் தெரிஞ்சுக்க ஒரு டெக்னிக்..! + Model Exam 4 [Click Here]

Day 5

கணிதத்தை எதிர்கொள்வது எப்படி? + Model Exam 5 [Click Here]

Day 6

வரலாறு பாடத்தில் மிஸ் பண்ணக்கூடாத பகுதிகள் + Model Exam 6 [Click Here]

Day 7

எளிய பகுதி ஏராளமான மதிப்பெண் இந்திய அரசியலமைப்புச் சட்டம்

+ Model Exam 7 [Click Here]

Day 8

திணறடிக்கும் அறிவியல்.. எத்தனை வினாக்கள் வரும்? எப்படிப் படிப்பது?

+ Model Exam 8 [Click Here]

அடுத்த கட்டுரைக்கு