Published:Updated:

ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி... ஆயுதமான மெழுகுவத்தி - மனித உரிமை மீறல்கள் #2017Rewind

ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி... ஆயுதமான மெழுகுவத்தி - மனித உரிமை மீறல்கள் #2017Rewind
ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி... ஆயுதமான மெழுகுவத்தி - மனித உரிமை மீறல்கள் #2017Rewind

ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி... ஆயுதமான மெழுகுவத்தி - மனித உரிமை மீறல்கள் #2017Rewind

ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி... ஆயுதமான மெழுகுவத்தி - மனித உரிமை மீறல்கள் #2017Rewind

கடந்துபோகக்கூடிய 2017ஆம் ஆண்டில் எத்தனையோ இனிமையான, மனதுக்கு இதமான நிகழ்வுகள் இருந்தாலும், மனதைவிட்டு அகலாத கொடுமையான நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக மனிதவுரிமைமீறல்கள், அரசு அதிகாரத்தில் இருப்பவர்களால் செய்யப்படும் அத்துமீறல்களால் அரங்கேறிய கொடுமைகள் மறக்கமுடியாதவை. அவற்றில் அதிகமான கவனம்பெற்றவை!

மதுரையில் பெண் ’தோழர்’களைத் தாக்கிய ஆண் போலீஸ்

பணமதிப்பு அழிப்பை எதிர்த்து சென்னையில் போராடியவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து மதுரையில் போராடிய சிபிஎம் கட்சியினர் மீது போலீஸ் கடுமையான தாக்குதல் நடத்தியது. ஜனவரி 3 அன்று பெரியார் பேருந்துநிலையம் முன்பு தடையை மீறி மறியல்செய்த அவர்களை, மாநகரக் கூடுதல் உதவி ஆணையர் முருகேசன், ஆய்வாளர் பாலமுருகேசன், தலைமையிலான போலீஸ் படை, 54 பேரை கண்மண் தெரியாமல் தாக்கினர். ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநகர் மா.செ. சசிகலா, ஊர்மெச்சிகுளம் சித்ரா ஆகியோருக்குக் கடுமையான பாதிப்பும் சசிகலாவுக்கு நெஞ்சுவலிக்கும் உள்ளானார்கள். ஈஸ்வரி என்பவர் மயங்கிவிழுந்தார். ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் சரவணன், கௌதம் ஆகியோருக்குக் கடுமையான காயம் உண்டானது. திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்ட அவர்களில் சார்லஸ் எனும் இளைஞன் மீது திடீரெனத் தாக்கியதுடன், புறநகர் மாவட்ட வாலிபர் சங்க நிர்வாகி தமிழரசனையும் அடித்து உதைத்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். தடுத்துநிறுத்த முயன்ற பெண் ’தோழர்’களை ஆண் போலீஸார் கையை இழுத்தும் உடைகளைக் களைந்தும் தாக்கினர். 

மெரினாவிலும் கடலோரத்திலும் அட்ராசிட்டி 

ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி... ஆயுதமான மெழுகுவத்தி - மனித உரிமை மீறல்கள் #2017Rewind

தை எழுச்சிப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஜனவரி 23 அதிகாலை முதலே அமைதியாக மிரட்டிய போலீஸ் அதிகாரிகள், ஒரு மணி நேரத்துக்கும் மேல் அவகாசம் தராமல், கூடியிருந்த பெருந்திரளானவர்களையும் நெருக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்துக்கும் மேல் தாக்குதலைத் தொடங்கிய அவர்கள், திருவல்லிக்கேணி நடுக்குப்பம் மீனவர்கள், மயிலாப்பூர் ரூதர்புரம், அம்பேத்கர் பாலம் பகுதி மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. நிகழ்வைப் பதிவுசெய்துகொண்டிருந்த விகடன், பாலிமர், நியூஸ் 7, தினகரன் செய்தியாளர்கள் இதில் படுகாயமடைந்தனர். தீக்கதிர் , பிபிசி புகைப்படக்காரர்களின் ஒளிப்பதிவுக் கருவிகள் தாக்கப்பட்டு, சேதமடைந்தன. முகத்தை மூடிக்கொண்டு பெண் போலீஸ்காரர் ஆட்டோவுக்குத் தீ வைத்து எரித்த காட்சி, இன்றைக்கும் பார்க்க மிக மோசமான ஓர் அத்துமீறல் ஆகும். தை எழுச்சிப் போராட்டத்தைப் போலவே போலீஸின் இந்த அத்துமீறலும் அகில இந்திய அளவில் ‘பெயர்’ வாங்கியது. 
இதே நாளில் மதுரையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் குறிவைத்து, அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் என்பவர் தாக்குதல் நடத்தினார். அதில் முகிலனுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; தொடர்ச்சியாக அவரை வாகனத்தில் ஏற்றி அங்குமிங்குமாக மதுரையைச் சுற்றி வாகனத்திலேயே போலீஸார் அலைக்கழித்தது மனிதவுரிமை ஆர்வலர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 

ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி... ஆயுதமான மெழுகுவத்தி - மனித உரிமை மீறல்கள் #2017Rewind


 

கோவை, சண்டையை விலக்கிவிட்டதற்காக சாதிவெறித் தாக்குதல்

கோவை மாவட்டம், சின்னத்தடாகம் வரப்பாளையம் கிராமத்தில் 27 பிப்ரவரி இரவு 9 மணியளவில் அருந்ததியர் மக்கள் மீது அதே ஊரைச் சேர்ந்த சாதியாதிக்க சக்திகள் தாக்குதல் நடத்தினர். அதே ஊரைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்குள் நடந்த சண்டையை அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விலக்கிவிடப்போனதுதான் காரணம். 20 பேர் கும்பலாகச் சேர்ந்து உருட்டுக்கட்டைகள், செங்கற்கள், இரும்புக்கம்பிகளைக் கொண்டு தாக்கியதுடன், கத்தியைக்கொண்டு பெண்களை கழுத்து, கண், முகம், கை ஆகிய இடங்களில் வெட்டியுள்ளார்கள். கடுமையாக பாதிப்புற்ற எட்டுப் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்தக் கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து மறுநாள் அனைத்துச் சமூகமாற்ற அமைப்புகளின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்யப்பட்டது. 

ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி... ஆயுதமான மெழுகுவத்தி - மனித உரிமை மீறல்கள் #2017Rewind
ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி... ஆயுதமான மெழுகுவத்தி - மனித உரிமை மீறல்கள் #2017Rewind

இராஜபாளையம், குடிநீர் பிடித்த அருந்ததியர் வீடுகள் எரிப்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம், கே.தொட்டியப்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூகத்தினரான அருந்ததியர்கள், குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கவேண்டும் என சட்டவிரோத உடன்பாட்டை அரசு நிர்வாகமும் சேர்ந்து செய்திருந்தது. அந்த நேரத்தை மீறி தண்ணீர் பிடித்ததற்காக 30 மார்ச் அருந்ததியர் மக்களை பிற சாதிகளைச் சேர்ந்த சாதியாதிக்க கும்பல் ஒன்று தாக்கியது; அவர்களின் 10 வீடுகளையும் எரித்து அட்டூழியம் செய்தது. 60 வீடுகளை சேதப்படுத்தியது. அருந்ததியர் சமூகப் பெண்களையும் ஆபாசமாகத் திட்டியதுடன் ஆண்கள் 10 பேரை மண்டை உடையும் அளவுக்குத் தாக்கவும் செய்தது, சாதியாதிக்க கும்பல். 

மதுவை எதிர்த்த பெண்களை அறைந்து, தாக்கிய சீருடை ...?

ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி... ஆயுதமான மெழுகுவத்தி - மனித உரிமை மீறல்கள் #2017Rewind

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் ஏப்ரல் 11ஆம் தேதி புதியதாக மதுக்கடை திறக்கக் கூடாது எனப் பகுதிவாசிகள் எதிர்ப்புதெரிவித்தும், அதை மீறி பேரூராட்சி கட்டட அனுமதி மின் இணைப்புப் பெறாமலே மதுக்கடையைத் திறந்தனர். கோபமடைந்த பகுதி மக்கள் சாமளாபுரத்தில் சாலை மறியல் செய்தனர். அவர்களுடன் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜுவும் இடையில் சேர்ந்துகொள்ள அரசுத் தரப்பில் பேச்சுநடத்தக்கூட எந்த அதிகாரியும் வரவில்லை. போராட்டம் நீடித்தநிலையில், மாலை 5 மணியளவில் கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன், டிஎஸ்பி மனோகர், ஆய்வாளர் தங்கவேல் தலைமையிலான போலீஸார் பெண்கள், முதியவர் எனப் பார்க்காமல் அனைவரையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர். இதில் மண்டை உடைந்து பலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. பாண்டியராஜனால் தாக்கப்பட்ட ஈஸ்வரிக்குக் காதில் பலத்த அடிபட்டதுடன் அவரது செவித்திறனும் இழந்துபோனது. இந்த நிகழ்வு குறித்து போலீஸ் துறை விசாரணை நடத்தியபோதும், அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல், பாண்டியராஜனுக்கு ஜூனில் பணி உயர்வு வழங்கப்பட்டது. 

மாட்டிறைச்சி உண்ட ஆய்வு மாணவரின் மீது தாக்குதல், பார்வை பாதிப்பு 

இந்தியா முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என மத்திய அரசு திடீர்த் தடையைக் கொண்டுவந்திருந்தது. அதற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை ஐ.ஐ.டி.யில் மே 28 ஆம் தேதி மாலையில் மாட்டிறைச்சி உண்ணும் விழாவை நடத்தினர். அதற்கு ஏற்பாடு செய்ததாகக் கூறி ஆய்வு மாணவர் சூரஜ் என்பவரை சக மாணவரான மணீஷ்குமார் சிங் என்பவரால் தாக்கப்பட்டார். இதில் சூரஜுக்குக் கண்பார்வை பாதிக்கப்பட்டது. எலும்புக் காயமும் ஏற்பட்டது. இதனால் சில மாதங்களுக்கு மருத்துவ ஓய்வில் இருக்கவேண்டியநிலை ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் சூரஜ் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்பட்டது. 

சென்னை ஐஐடியின் முன்பாக நடந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் போராட்டக்காரர் ஒருவரின் கையை பல போலீஸ்காரர்கள் சேர்ந்து திருகி உடைக்க முயற்சிசெய்த காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அதிர்ச்சியில் உறையவைத்தது. 

மெழுகுவத்தி அஞ்சலி செலுத்தமுயன்ற திருமுருகன் காந்திக்குக் குண்டர் சட்டம்

ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி... ஆயுதமான மெழுகுவத்தி - மனித உரிமை மீறல்கள் #2017Rewind

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்கு மே 21 அன்று அஞ்சலி செலுத்தமுயன்றதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் டைசன், இளமாறன் மூவர் உட்பட 17 பேரைக் கைதுசெய்த போலீஸ் சிறையில் அடைத்தது. அவர்களைப் பிணையில் விடுவிக்க முயற்சி செய்துகொண்டிருக்கையில், 28ஆம் தேதி இவர்கள் மூவர் மீது குண்டர் சட்ட வழக்குப் பதிந்தனர். அது முறையற்றது என உயர் நீதிமன்றத்தால் பல மாதங்களுக்குப் பிறகு மூவரும் விடுதலைசெய்யப்பட்டனர். 

சுற்றுச்சூழல் காக்க பிரசாரம் செய்த வளர்மதிக்குக் குண்டர் சட்டம்

ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி... ஆயுதமான மெழுகுவத்தி - மனித உரிமை மீறல்கள் #2017Rewind

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் ஆகிய இடங்களில் நில, நீர்வளத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூலை 15ஆம் தேதி திமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பிலும் புதுக்கோட்டையில் போராட்டம் நடந்தது. அதற்கு ஆதரவாக துண்டுப்பிரசுரம் கொடுத்ததற்காக, ஜூலை 12ஆம் தேதி சேலத்தில் கைதுசெய்யப்பட்டார், பல்கலைக்கழக மாணவி வளர்மதி. அவருடன் கைதுசெய்யப்பட்ட ஜெயந்தி என்பவரை விடுவித்துவிட்டு, வளர்மதியின் மீது குண்டர் சட்டத்தில் புதிய வழக்குப் போட்டது, அரசு. அதையொட்டி சேலம் சிறையிலிருந்து கோவை சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு உயர் நீதிமன்றத்தால் வளர்மதி விடுதலை செய்யப்பட்டார். 
 

கதிராமங்கலம் பெண்களிடம் போலீஸ் அநாகரிகம், மண்டை உடைப்பு

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 2002ஆம் ஆண்டிலிருந்து பெட்ரோலிய எண்ணெய் எடுக்கப்பட்டுவருகிறது. அதனால் அந்த ஊர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நிலத்தடிநீர் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. ஜூலை 30 அன்று பெட்ரோலியக் கசிவினால் அங்கு தீ பற்றிப் பரவ, அச்சமடைந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அதிகாரிகள் வந்தபோதும் மக்களுக்கு உரிய பதில் கூறவில்லை. கொந்தளித்த மக்களை அடக்க அவர்களை கண்மண் தெரியாமல் போலீஸார் தாக்கினர். பெண்களிடம் ஆபாசமாகப் பேசி, அவர்களிடம் தவறாக நடக்கவும் போலீஸார் முயன்றனர் என பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டினர். 
 

குழந்தைகளோடு தீக்குளித்து இறந்த நெல்லை இசக்கியப்பன்- சுப்புலட்சுமி

கந்து வட்டிக்குக் கடன்வாங்கி திருப்பிச்செலுத்த முடியாத நெல்லை தென்காசி அருகில் இசக்கியப்பன், அவரின் மனைவி சுப்புலட்சுமி இருவரும் நெல்லை மாவட்ட ஆட்சியரகத்தில் அக்.23 அன்று தங்களின் ஒன்றரை வயது குழந்தை மதி சரண்யா, ஐந்தரை வயது அட்சய பரணிகாவுக்கும் தீவைத்துவிட்டு, தாங்களும் தீக்குளித்தனர். பற்றி எரிந்த அவர்களின் நேரலைக் காட்சி, நாட்டையே உலுக்கியெடுத்தது. எத்தனையோ சட்டங்களும் திட்டங்களும் வந்தபோதும் தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் கந்துவட்டியை அரசுகளால் ஒழிக்கவேமுடியவில்லை; அடித்தட்டு மக்களை அதிக அளவில் கொல்லும் ஒன்றாக கந்துவட்டி இன்னும் செழிப்பாக வளர்ந்துகொண்டுவருகிறது. 

அரக்கோணம், பட்டுப்போன 4 மாணவப்பிள்ளைகளின் உயிர்!

வேலூர் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைப் பகுதியான பனப்பாக்கத்தில் 11 ஆம் வகுப்பு மாணவிகள் நவம்பர் 24 அன்று பள்ளிக்குப்போய்விட்டு வகுப்பில் இருக்காமல் அருகிலுள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர். மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் என மாறிமாறி குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும், உரிமைகள் மறுக்கப்பட்டதும் அத்துமீறலும் நான்கு வருங்கால நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பறித்துவிட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. இவ்வளவு கொடுமைக்குப் பின்னரும் இதைப் போன்ற சம்பவங்கள் மறுபடியும் நிகழும் சூழலே இன்னும் நிலவுகிறது. 

இந்த நிலை இனியாகிலும் மாற வேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு