Published:Updated:

குழந்தைத் தொழிலாளர் பள்ளியில் படித்து தேசிய அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வான மலைப்பகுதி சிறுவர்கள்!

குழந்தைத் தொழிலாளர் பள்ளியில் படித்து தேசிய அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வான மலைப்பகுதி சிறுவர்கள்!

குழந்தைத் தொழிலாளர் பள்ளியில் படித்து தேசிய அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வான மலைப்பகுதி சிறுவர்கள்!

குழந்தைத் தொழிலாளர் பள்ளியில் படித்து தேசிய அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வான மலைப்பகுதி சிறுவர்கள்!

Published:Updated:


உலகின் எந்தவோர் இடத்தில் இருப்பவரையும் எளிதில் தொடர்புகொள்ளும் விதத்தில் போக்குவரத்து, தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது எனப் பெருமை பேசுகிறோம். இதே காலகட்டத்தில்தான் தங்கள் ஊருக்குப் பேருந்து வசதி இல்லாததால் இவ்வளவு ரூபாய் விரயமாகிறது என்கிறார்கள் பள்ளி மாணவர்கள். அவர்கள் சொல்லும் தொகை நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அவர்கள் யார் என்பதைப் பார்ப்போம். 

குழந்தையின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தொடக்கப்பள்ளி இருக்க வேண்டும் என்பது கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படை விதி. ஆனால், பெரும்பாலான மலைப்பகுதிகளில் இது நடைமுறையில் இல்லை. அதில் ஒரு பகுதிதான் ஈரோடு மாவட்டம், பர்கூர். அந்தப் பகுதியில் அக்னிபாவி, கொங்காடை, சுண்டைபோடு உள்ளிட்ட ஊர்களில் வாழும் குழந்தைகள்,  சுடர் எனும் தன்னார்வ நிறுவனத்தால் தொடங்கப்பட்டிருக்கும் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகள் மூலமே கல்வியைப் பெற்று வருகின்றனர். 

குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அதன்பிறகு, கல்வியைத் தொடரவும் சிரமப்படுகின்றனர். உதாரணமாக, கொங்காடை கிராமத்திலிருந்து உயர்நிலை வகுப்புகள் படிக்க 12 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஒசூர் எனும் ஊருக்குத்தான் செல்ல வேண்டும். பேருந்து வசதியும் கிடையாது.  இந்தச் சூழ்நிலைகளில் படித்தாலும் பல சாதனைகளை நிகழ்த்தவும் அந்த மாணவர்கள் தவறவில்லை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாணவர்களின் அறிவியல் சிந்தனையை வளர்த்தெடுப்பதற்காக மத்திய அரசு நடத்தும் தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இந்தப் பகுதி மாணவர்கள் பலர் பங்குபெற்றுள்ளனர். 2012-ல் உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில், இளம் விஞ்ஞானி பட்டம் வென்றார் கொங்காடை கணேசன். அடுத்து 2013-ல் மத்தியப்பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இளம் விஞ்ஞானி பட்டம் வென்றார் ஜீயன்தொட்டி கவின்.

அந்த வரிசையில் இந்தாண்டு (2007) குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் இளம் விஞ்ஞானி பட்டம் பெறுகிறார் கொங்காடை எம்.சின்னக்கண்ணன். சமவெளியில் இருக்கும் மாணவர்களுக்கும் மலைப்பகுதியில் படிக்கும் மாணவர்களுக்கும் இடையே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் தலைப்பில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது. எம்.சின்னக்கண்ணன் மற்றும் நண்பர்கள் 'மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு' எனும் தலைப்பில் தங்கள் ஆய்வை மேற்கொண்டார்கள். மாநில அளவிலான போட்டி, சென்னையில் நடந்தபோது  282 ஆய்வுக்கட்டுரைகளில் 30 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. எட்டாம் வகுப்புப் பயிலும் சின்னக்கண்ணன், கார்த்திக், நாகராஜ், ராஜ்குமார் எனும் நான்கு மாணவர்கள் குழுவாக இணைந்து ஆய்வு செய்த கட்டுரையும் அவற்றில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது. குழுவின் தலைவரான, மாணவர் எம்.சின்னக்கண்ணனிடம் அவரது ஆய்வு பற்றிக் கேட்டோம்.

 "மலைப்பகுதியில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் எங்களின் ஆய்வைத் தேர்வு செய்தோம். இங்குள்ள முதன்மையான சிக்கல், போக்குவரத்து வசதி இல்லாததே. இதனால், எதுவொன்றுக்காகவும் கீழே சமவெளிக்குச் செல்ல வேண்டியதாயிருக்கிறது. 

உதாரணமாக, கொங்காடை கிராமத்தினர் மளிகை பொருள்கள் வாங்க, மருத்துவமனைக்குச் செல்ல மற்றும் அரசு அலுவலங்களுக்குச் செல்வது என அனைத்துக்குமே அந்தியூருக்குத்தான் செல்ல வேண்டும். அங்குச் செல்ல பேருந்து வசதியும் கிடையாது. அதனால், டேம்போக்கள் மூலம் செல்கிறார்கள். அதில் சென்று, திரும்ப ஒரு நபருக்கு நூறு ரூபாய் (50 + 50) ஆகிறது. இதையே நாங்கள் ஆய்வின் மையப்பகுதியாக எடுத்துகொண்டு, ஒசூர் பகுதியில் அமர்ந்துகொண்டு, டொம்போக்களில் பயணிப்போரைக் கணக்கெடுக்க ஆரம்பித்தோம். எங்களின் கணக்கின்படி, ஒரு வாரத்துக்கு 1940 பேர் அந்தியூருக்குச் செல்கின்றனர். இதையே ஒரு மாதம் எனக் கொண்டால் 1,940 X 4 = 7,760. ஒரு நபருக்கு 100 ரூபாய் எனக் கணக்கிட்டால், 7 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. 

எங்கள் ஊரில் இருக்கும் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள் வாடகை ஜீப் மூலமே வருகின்றனர். ஓர் ஆசிரியருக்கு மாத வாடகையாக ரூபாய் 3000 வசூலிக்கப்படுகிறது. இங்கு வரும் 32 ஆசிரியர்களுக்கும் இதைக் கணக்கிட்டால் ரூ 96 ஆயிரம் ரூபாய். ஆக மொத்தம் 8 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் ஒரு மாதத்துக்குச் செலவாகிறது. இதை ஒரு வருடத்துக்கு எனக் கணக்கிட்டால் ஒரு கோடியே 4 லட்சத்து 64 ஆயிரம் (1,04,64,000) ரூபாயாகிறது. இதுவே அரசுப் பேருந்து வசதி இருந்தால், இப்போதைய செலவில் சுமார் 40 சதவிகிதமே செலவாகும். மிகவும் சிரமப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதியைப் போக்குவரத்துக்கே செலவழிப்பதால் இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமும் உயரவில்லை. மேலும், டெம்போகள் காலை, மாலை என இரு வேளைகளில்தான் இயங்குவதால், அதற்காகக் காத்திருந்து நேர வியமும் ஆகிறது. 

போக்குவரத்து வசதி இல்லாததால் நேரடியாக இன்னும் சில பாதிப்புகளையும் எங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளோம். உயர்நிலை வகுப்புகள் வரை படித்தவர்கள், மேல்நிலைக்கல்விக்காக 60 கி.மீ செல்லவேண்டியுள்ளது. இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை நடுநிலைப்பள்ளியுடன் நிறுத்திவிடவே நினைக்கின்றனர். இப்படி, படிப்பைப் பாதியிலேயே நிறுத்துபவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறுகின்றனர். மாணவிகளுக்குக் குழந்தைத்திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. எங்களின் ஆய்வில் கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளிப்படிப்பை 27 பேர்  எட்டாம் வகுப்போடு நிறுத்தியுள்ளதையும், 9-ம் வகுப்புக்குச் சென்று ஒரு சில நாளில் நின்று நின்று போனவர்களின் எண்ணிக்கை 23. ஆக மொத்தம் 50 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது போக்குவரத்து வசதியின்மை முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுள்ளோம்." என்கிறார் சின்னக்கண்ணன்.  

அரசுப் பள்ளி மாணவர்களின் திறமையைக் கொண்டாடுவோம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism